மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

பப்ஜி லிஸ்ட்ல இல்ல தானே: அப்டேட் குமாரு

பப்ஜி லிஸ்ட்ல இல்ல தானே: அப்டேட் குமாரு

இன்னைக்கு பக்கத்து வீட்டு அண்ணா கையில டீ கப்போட ரொம்ப சோகமா உக்காந்திட்டு இருந்தாரு. என்னண்ணா பிரச்னைன்னு விசாரிச்சா, ‘பிரபலம் ஒருத்தரு எனக்கு ஃபேஸ்புக்ல ஃப்ரெண்டா இருக்காரு . இன்னைக்கு எனக்கு பிடிச்ச சினிமா கேவலம்ன்னு சொல்லி ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தாரு. நான் இல்லன்னு கமெண்ட் பண்ணதுக்கு என்ன திட்டிட்டாருப்பா’ன்னு சொல்றாரு. அதுக்கு நீங்க என்ன பண்ணிங்கன்னு கேட்டா, ‘நான் அவரை ஃபேஸ்புக்ல அன்ஃபாலோ பண்ணிட்டேன். இனிமே லைக், ஷேர் எல்லாம் போட மாட்டேன். அவ்வளவு தான் இப்போ பயந்திருப்பாரு இல்லே’ன்னு கேக்றாரு. ‘அவரு இதுக்கு பயப்படுவாருன்னு நீங்க நினைக்கிறீங்களா?ன்னு கேட்டேன். ‘ஆமா, ஆப் எல்லாத்தையும் தடை பண்ணி நம்ம சீனாவுக்கு பதிலடி கொடுத்ததை பாத்து அவங்க பயந்திருப்பாங்க இல்லே. அதே மாதிரி தான் இதுவும்’ன்னு சொல்றாரு. இதைக் கேட்டிட்டு இருந்த அவரு பையன், ‘நல்ல வேள பப்ஜிய சீனாகாரங்க கண்டுபிடிக்கல. இல்லேன்னா அதுவும் இப்போ லிஸ்ட்ல வந்திருக்கும்’ன்னு பதற்றமா சொல்றான். நீங்க அப்டேட்ட படிங்க. நான் அந்த ஆப் எல்லாத்தையும் அன்-இன்ஸ்டால் பண்ணி ஆன்டி-இந்தியன் அவப் பெயரை மாத்திட்டு வர்றேன்.

Harithranadhi Raja

ஜீ... ஜீ.. அப்படியே இந்த ரவா உப்புமாவும் சீன தயாரிப்புதான்னு அறிவிச்சிடுங்களேன்.. ப்ளீஸ்!

நாகராஜ சோழன் MA.MLA

"ஜின் பிங் " மிரட்டுவதை விட்டுட்டு

"G.P முத்து "வை மிரடீட்டு இறுக்காங்கப்பா!!!

எனக்கொரு டவுட்டு ⁉

சீனாவில் ஸ்வைன் ஃப்ளுவில் இருந்து புதிய G4 வைரஸ் கண்டுபிடிப்பு... பல நாடுகளுக்கு பரவும் என எச்சரிக்கை!# அடப்பாவி, வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க சொன்னா வைரஸ்ஸா கண்டுபிடிக்குறான்..!

PrabuG

இன்னைக்கு ஜட்ஜை மிரட்டின போலீசை திட்டுற பயலுவோ எல்லாம் யாருன்னு நெனைக்குற.

தர்பார் படத்துல மனித உரிமைகள் ஆணையாளரை போலீஸ் மிரட்டுனதுக்கு சில்லரையை சிதற விட்ட பயலுகதேன்..

எனக்கொரு டவுட்டு ⁉

மேப்ல வைப்பேன்னு நினைச்சியா ஆப்ல வச்சேன்..!

Niranjan kumar

பயங்கர மன அழுத்தத்தில் இருந்ததால்தான் நீதிபதியை" உன்னால ஒன்னும் புடுங்க முடியாது டா" காவலர் பேசியதாக நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் வாதம்

அப்படியா? கொரோனா காலத்தில் பெரும்பாலான மருத்துவர்கள் மன அழுத்தத்தில் தான் உள்ளனர் அதனால தெரியாம விஷ ஊசி போட்டுட்டா ஓகேவா ஆப்பீசர்!

ஜோக்கர்

ஒண்ணுமில்லாத பிரச்சனைக்கு, கொலை பண்ற அளவுக்கு தண்டிக்குறதும்,

கொலை கொள்ளை பண்ணவன ஒண்ணுமே பண்ணாத அளவுக்கு ராஜ மரியாதையா நடத்துறது லாம் நம்ம ஊருல மட்டும்தான் நடக்கும்.

நாகராஜ சோழன் MA.MLA

19 ம் தேதி முதல் உள்ள CCTV பதிவு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இல்லை.செய்தி

அவ்வளவு பெரிய அப்போலோ ஹாஸ்பிடல் லயே சிசிடிவி இல்லைனு சொண்ணவங்களுக்கு இதெல்லாம் சாதாரணம்!

சரவணன். ℳ

என்னங்க, அந்த ஆள் உங்களை சகட்டுமேனிக்கு திட்டறான்.. அமைதியா இருக்கீங்க...?

டேய் விடு.. விடு.. அவன் மன அழுத்தத்துல இருக்கான்...!

மித்ரன்

கொரோனா ஒரு கண்ணுக்கு தெரியாத வைரஸ் - எடப்பாடி பழனிச்சாமி

கண்ணுக்கு தெரியாட்டினா தான் அது வைரஸ்; கண்ணுக்கு தெரிஞ்சா அது உயிரினம்..?!

டீ இன்னும் வரலை

ஒரே தடவையில MLA election ல நின்னு கூட ஜெயிச்சுரலாம் போல...

ஒரு தடவை e pass apply பண்ணி

ஒரு Pass வாங்க முடியலையே

தர்மஅடி தர்மலிங்கம்

ஜி நீங்க சீனாவ பழிவாங்கறதா நெனச்சு ஜியோவ பழிவாங்கிட்டிங்க இந்த ஆப்பையெல்லாம் தடை பண்டுனா இனி ஜியோவுக்கு யாரு ரீ-சார்ஜ் பண்டுவாங்க!

-லாக் ஆஃப்

செவ்வாய், 30 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon