மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

ரகசியம் காக்க ரெஜினாவை மறைக்கும் விஷால்

ரகசியம் காக்க ரெஜினாவை மறைக்கும் விஷால்

விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கெஸண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் சக்ரா.

எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை விஷால், தனது விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ட்ரெய்லர் வீடியோவில் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படும் ரெஜினா ஓரிடத்தில் கூட இடம்பெறவில்லை. இயல்பாக அவருடைய காட்சிகள் விடுபட்டுப் போகவில்லை விஷால் திட்டமிட்டு ரெஜினா ட்ரெய்லரில் இடம்பெறாமல் காட்டியுள்ளார் என்கிறது தயாரிப்பு வட்டாரம்.

அதற்குக் காரணம், படத்தில் ரெஜினா வில்லியாக நடித்திருக்கிறார். அவர் நடித்துள்ள ஒரு காட்சி அல்லது ஒரு வசனத்தைக் காட்டினாலே அது அவருடைய வேடத்தை வெளிப்படுத்தி விடும். இதனால் தான் அவர் முன்னோட்டத்தில் இடம்பெறவில்லை என்று சொல்கிறார்கள்.

சண்டக்கோழி 2 படத்தில் வரலட்சுமியை வில்லியாக்கிய விஷால் இந்தப்படத்தில் ரெஜினாவை வில்லியாக்கியிருக்கிறார்

-இராமானுஜம்

செவ்வாய், 30 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon