மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

அமேசானுக்கு போட்டியாக டிஸ்னி ஹாட் ஸ்டார்!

அமேசானுக்கு போட்டியாக டிஸ்னி ஹாட் ஸ்டார்!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதுமே பொதுமக்கள் அதிகம் கூடும் மால், திரையரங்குகள் கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளன.

இவை எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது இதுவரை உறுதியாகவில்லை. இந்த நெருக்கடியான சூழலைத் தங்கள் வியாபார எல்லையை விரிவுபடுத்த, இந்திய திரைப்படங்களை திரையரங்க வெளியீட்டுக்கு முன் OTT தளங்களில் திரையிடுவதற்காக அனைத்து நிறுவனங்களும் களமிறங்கின. கொரோனா காரணமாக முடங்கியுள்ள தயாரிப்பாளர்கள் அசல் தேறினால் போதும் என்ற முடிவுக்கு வந்தனர். இதனால் அமேசான் நடுத்தர பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட (சுமார் 6 கோடிக்கு குறைவாக) படங்களை எளிதாக வாங்கி வெளியிட தொடங்கிவிட்டது .

இதன் காரணமாக சிறுபட்ஜெட் படங்கள் அதிகம் தங்கள் நிறுவனத்தை தேடி வரும் என எதிர்பார்த்த அமேசான் நிறுவனத்திற்கு வெற்றி கிட்டவில்லை. அமேசான் மூலம் வெளியிடப்படும் படங்கள் வெளிநாடு - இந்தியாவுக்கு இடையேயுள்ள நேர வித்தியாசம் காரணமாக திருட்டுதனமாக அமேசான் வெளியிடும் முன்பே இணையதளங்களில் தரம் குறையில்லாமல் வெளியாகி விடுகிறது. இதனால் வருவாய் அடிப்படையில் பங்கு என்பது லாபகரமாக இருக்காது என தயாரிப்பாளர்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர்.

இதனிடையே, இந்திப் படங்களின் உரிமையைக் கைப்பற்றி டிஜிட்டல் வெளியீட்டை உறுதி செய்திருக்கிறது டிஸ்னி நிறுவனம். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஜூன் 29 அன்று அறிவித்தது.

அதன்படி, டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை வெளியாகவுள்ள 7 படங்களின் பட்டியல்,

லக்‌ஷ்மி பாம் (காஞ்சனா ரீமேக்) – அக்‌ஷய் குமார் நாயகன், கியாரா அத்வானி நாயகி. ராகவா லாரன்ஸ் இயக்கம்.

பூஜ்- தி ப்ரைட் ஆஃப் இந்தியா (1971 இந்தியா – பாக் யுத்தம் பற்றிய படம்) – அஜய் தேவ்கன் நாயகன், உடன் சஞ்சய் தத், சோனாக்‌ஷி. அபிஷேக் துதைய்யா இயக்கம்.

சடக் 2 (1991-ல் வந்த படத்தின் இரண்டாம் பாகம்) – நடிப்பு: பூஜா பட், சஞ்சய் தத், ஆலியா பட், ஆதித்யா ராய் கபூர். மஹேஷ் பட் இயக்கம்.

தில் பேச்சாரா (fault in our stars நாவலின் / ஹாலிவுட் படத்தின் ரீமேக்) – சுஷாந்த் சிங் ராஜ்புத் நாயகன், சஞ்சனா சங்கி நாயகி. முகேஷ் சாப்ரா இயக்கம். ரஹ்மான் இசை.

பிக் புல் – அபிஷேக் பச்சன் நாயகன், இலியானா, நிகிதா தத் – அஜய் தேவ்கன் இணைந்து தயாரிக்கும் படம். கூகி குலாடி இயக்கம்.

லூட்கேஸ் – குணால் கெம்மு நாயகன், உடன் கஜ்ராஜ் ராவ், ரசிகா துக்கால், ரன்வீர் ஷோரே, விஜய் ராஸ். ராஜேஷ் கிருஷ்ணன் இயக்கம். ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பு.

குதா ஹாஃபிஸ் – வித்யுத் ஜம்வால், ஷிவலேகா ஓபராய். ஃபரூக் கபீர் இயக்கம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-இராமானுஜம்

செவ்வாய், 30 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon