மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜுன் 2020

'பிகில்' ராயப்பனை ‘உருவாக்கிய’ சுஷாந்த்

'பிகில்' ராயப்பனை ‘உருவாக்கிய’  சுஷாந்த்

பிகில் படத்தில் அப்பா விஜய்யாக வரும் ராயப்பன் கதாபாத்திரத்திம் உருவாக சுஷாந்த் சிங் நடித்த 'சிச்சோர்' படம் தான் காரணம் என அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

'எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியாக நடித்ததற்காக உலகமெங்கும் அறியப்பட்டவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து வந்து கொண்டிருந்த இவர், இம்மாத தொடக்கத்தில் மும்பையில் உள்ள அவரது குடியிருப்பில் இறந்து கிடந்தார். தற்போது அவரது மறைவு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சுஷாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம், நிதேஷ் திவாரி இயக்கிய 'சிச்சோர்'. ஆஷிக் 2 படத்தின் நாயகி ஷ்ரத்தா கபூருடன் சுஷாந்த் இப்படத்தின் இணைந்து நடித்தார். கல்லூரி காலத்தையும் அதற்குப் பிறகான வாழ்க்கையையும் மையப்படுத்தி உருவாகியிருந்தது சிச்சோர். இப்படத்தில், சுஷாந்த் தனது கதாபாத்திரத்தை இரண்டு வெவ்வேறு கால கட்டங்களில், அதாவது டீனேஜ் காலத்திலும், பின்னர் ஒரு தந்தையாகவும் ஏற்று நடித்தார்.

இந்நிலையில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியான அர்ச்சனா கல்பாத்தி, அட்லீ இயக்கிய 'பிகில்' படத்தில் விஜய் எப்படி இரட்டை வேடங்களில் நடிக்க வந்தார் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளார். அண்மையில் ஒரு நேர்காணலில், அர்ச்சனா அவர்கள் படத்தில் ஆரம்பத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க வேண்டும் என்று நினைத்ததில்லை என்றும், உண்மையில் சில மூத்த நடிகர்களை ராயப்பன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என திட்டமிட்டிருந்ததையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சுஷாந்த் சிங்கை 'சிச்சோர்' படத்தில் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் பார்த்த பிறகு தான் விஜய்யை அப்பா, மகன் என்ற இரு வேடங்களிலும் நடிக்க வைக்க முடிவானது எனக் கூறியுள்ளார். பிகில் படத்தில் எல்லோருக்கும் பிடித்தமான கதாபாத்திரமாக கருதப்படும் ராயப்பன் கதாபாத்திரத்தை விஜய் ஏற்று நடித்ததன் பின்னணியில் மறைந்த சுஷாந்த் சிங் இருந்திருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

4 நிமிட வாசிப்பு

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

3 நிமிட வாசிப்பு

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி ...

3 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி வருமா ?

செவ்வாய் 30 ஜுன் 2020