மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜுன் 2020

டிக் டாக் தடை: ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

டிக் டாக் தடை: ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

இந்தியா-சீனா இருநாட்டு எல்லை மோதல்களைத் தொடர்ந்து டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிப்பதாக மத்திய அரசு நேற்று(ஜூன் 29) இரவு அறிவித்தது.

சீனாவையும், சீன நாட்டு பொருட்களையும் இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தொடர்ந்து பிரச்சாரம் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதில் பல மொபைல் செயலிகளையும் பெரும்பான்மையான இந்திய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சாதாரண மக்களுக்கும் முன்னணி நடிகர் நடிகைகளுக்கு இணையான பிரபல அந்தஸ்தைத் தந்த டிக் டாக் செயலிக்கு இந்திய இளைஞர்கள் பலரும் தீவிர ரசிகர்களாக உள்ளனர்.

நேற்று தடை அறிவிப்பு வெளியானதில் இருந்தே டிக் டாக் திறமையாளர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்து விட்டனர். நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் பிரியா விடை கொடுத்து வீடியோக்களையும் வெளியிடத் தொடங்கினர். பிரபலங்கள் பலரும் தங்கள் இன்ஸ்டாகிராம் ஐடியைப் பதிவிட்டு அங்கே தன்னைப் பின்தொடருமாறு கூறி வருகின்றனர். எனினும் தற்போது பயன்பாட்டில் இருக்கும் டிக் டாக் பக்கங்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது எனவும், ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதால் புதிதாக பதிவிறக்கம் செய்ய மட்டுமே இயலாது என்றும் விளக்கம் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் டிக் டாக் தடைக்கு எதிராக அதன் தீவிர ரசிகர்கள் பலரும் டிக் டாக்கிலேயே பலரும் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

@imsubu

Tiktok Ban pannitaanga😭🥺 Insta la meet pannuvom❤️ ##trending ##subuvines ##ownconcept ##quarantine

♬ original sound - imsubu

தங்களை விட்டு செல்லும் டிக் டாக் செயலிக்கு கண்ணீருடன் விடை கொடுப்பதாக பிரபலம் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். டிக் டாக் தடையை ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபத்துடனும் பலரும் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

@samaarawhigg

##fyp ##foryou ##foryoupage ##tiktok ##china ##india

♬ Justin Bieber × Yummy Tesher Remix - tesherrrr

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்திற்காக டிக் டாக்கை தடை செய்கிறீர்களே, சீனர்களால் கண்டறியப்பட்ட தேர்வு முறையையும் தடை செய்து தேர்வே இல்லாமல் செய்ய வேண்டியது தானே என்று கேட்டு வீடியோ ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளது.

இதே போன்ற ஏராளமான வீடியோக்கள் கோபத்துடனும், சோகத்துடனும் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டு வருகின்றன.

மீண்டு(ம்) வாழ வருகிறேன்: இயக்குநர் வசந்தபாலன்

3 நிமிட வாசிப்பு

மீண்டு(ம்) வாழ வருகிறேன்: இயக்குநர் வசந்தபாலன்

நிதி நெருக்கடி: புலம்பும் ஸ்ருதி

3 நிமிட வாசிப்பு

நிதி நெருக்கடி: புலம்பும் ஸ்ருதி

அசுரன் படத்திற்கு இணையதளத்தில் கிடைத்த கெளரவம்!

3 நிமிட வாசிப்பு

அசுரன் படத்திற்கு இணையதளத்தில் கிடைத்த கெளரவம்!

செவ்வாய் 30 ஜுன் 2020