மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

விக்ரம்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் ‘தும்பி துள்ளல்’!

விக்ரம்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் ‘தும்பி துள்ளல்’!

விக்ரம் கதாநாயகனாக நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘கோப்ரா’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் வெளிவரவிருக்கும் இந்தத் திரைப்படம் மாறுபட்ட கதைக்களத்துடன் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது.

இந்த நிலையில் ‘கோப்ரா’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தும்பி துள்ளல்’ என்னும் முதல் பாடல் இன்று(ஜூன் 29) வெளியிடப்பட்டுள்ளது.

ஏர்.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்தப்பாடலை ஷ்ரேயா கோஷல் மற்றும் நகுல் அப்யங்கார் இணைந்து பாடியுள்ளனர். திருமண கொண்டாட்ட தீம் பாடலாக வெளியாகியுள்ள ‘தும்பி துள்ளல்’ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. பாடலுக்காக வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், மிருணாளினி, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் உள்ளிட்டவர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon