மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

தகுதி வந்தும் தவிக்க வேண்டியதா இருக்கு: அப்டேட் குமாரு

தகுதி வந்தும் தவிக்க வேண்டியதா இருக்கு: அப்டேட் குமாரு

‘எனக்கு வெளிநாட்டுக்குப் போய் வேலை பாக்குற தகுதி வந்த இந்த நேரத்தில இப்படி கொரோனா வந்திருச்சே’

ன்னு ரொம்ப ஃபீல் பண்ணி என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தன் சொல்லிட்டு இருந்தான். ‘என்னடா பாஸ்போர்ட், விசா எல்லாம் ரெடியாகிருச்சா? என்ன வேலை? எந்த நாட்டுக்குப் போகப் போற?’ன்னு ஆர்வமா கேட்டேன். ‘ஆமா, அப்படியே வந்துட்டாலும் கொரோனா கூட்டிட்டு போய் பத்திரமா விட்டிரும்பாரு’ன்னு விரக்தியா சொல்றான். ‘அப்புறம் என்னடா தகுதி பத்தி சொன்ன’ன்னு கேட்டா, ‘அது ஒண்ணும் இல்லடா, இந்த லாக் டவுன் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் காலைல தூக்கம் தூக்கமா வருது. நைட் ஆச்சுன்னா தூக்கம் தூரமா போகுது. அதான் இப்படி இருக்கும்போது ஃபாரின் போய் தான் செட்டில் ஆகணும்’ன்னு சொல்றான். நீங்க அப்டேட்ட படிங்க. நான் கிளம்புறேன்.

ச ப் பா ணி

நல்ல கவிதை என்பதற்கான வரையறை என்ன?"

கவிதையில் எழுதாத வரிகள் ( unwriiten lines) வாசகன் தானாக உணரும் வண்ணம் இருக்க வேண்டும்

-சுஜாதா

mohanram.ko

மருந்து மாத்திரை செலவு 405 ரூபாய். மொத்த மருத்துவ செலவு 3.5 லட்சம். நல்லா இருக்குயா உங்க நியாயம்

ரஹீம் கஸ்ஸாலி

ஒருவர் பிச்சை கேட்டார். பாக்கெட்டில் இரண்டு ரூபாய்தான் இருந்தது. எடுத்து கொடுத்தேன். ஒரு மாதிரியா பார்த்துட்டு நீயே வச்சுக்க என்று சொல்லிட்டார். ரெண்டு ரூபாய்ன்னா அவ்வளவு கேவலமா போச்சா?... இந்த ரெண்டு ரூபாய்க்குத்தான் பொய் பொய்யா ரைட்டப் எழுதி உருட்டிக்கிட்டு கிடக்கானுக

மித்ரன்

ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல - பிரதீப் கவுர்

மூன்று மாசத்துக்கு முன்னாடி ஊரடங்குதான் இதற்கு ஒரே தீர்வுனு சொன்னாங்க..?!

மழைமுகில்

தேவை என்னன்னு தெரியாத வரை எந்த தேடலும் பலனில்லாததே.

நாகராஜ சோழன் MA.MLA

மக்கள் to நிர்மலா மேடம்~

நீங்க ஒன்னும் சொல்லவேண்டாம், என்ன சொல்லுவீங்கன்னு எங்களுக்கு நல்லா தெரியும்,

"நான் எலக்ட்ரிக் கார்ல தான் போறேன், அதனால் பெட்ரோல் டீசல் விலை பத்தி எனக்கு கவலை இல்லை " சொல்லுவீங்க, அதானே!

மித்ரன்

கலக்கப்போவது முதல்வர்; கலங்கப்போகுது கொரோனா - நமது அம்மா நாளேடு

சசிகலா வெளிய வரட்டும் அப்பறம் யாரு கலங்க போறாங்கன்னு தெரியும்..?!

முகமூடி

எதிரிகள் இல்லை என்று கர்வம் கொண்ட நேரத்தில்,

காலடியில் துரோகிகள் இருப்பதை உணர்த் தவறிவிடுகிறோம்..!!

நட்சத்திரா

இந்த கடைகுட்டியா மட்டும் பொறக்கவே கூடாது... எல்லா பழியும் நம்ம மேல தான் விழுது

எனக்கொரு டவுட்டு ⁉

முழு முடக்கம் என்பது கோடரியை எடுத்து கொசுவை கொல்வது போன்றது- மருத்துவக்குழு

அது எதுக்கு சார், எங்ககிட்ட கொசுவை கொல்லும் நவீன மெஷின் இருக்கு..!

mohanram.ko

நம் கையில் சுடச்சுட சாப்பாடு இருந்தாலும், ஒருநாள் காத்திருந்தால் தான் பழைய சோறு கிடைக்கும்

மித்ரன்

எல்லையில் அத்துமீறியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளோம் - பிரதமர் மோடி

பாத்தீங்களா ஜீ இப்பக்கூட சீனான்னு சொல்ல உங்க வாய் வரல..?!

-லாக் ஆஃப்

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon