மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

வருகிறாள் லேடி 'ஜாக் ஸ்பாரோ'!

வருகிறாள் லேடி 'ஜாக் ஸ்பாரோ'!

டிஸ்னியின் பிரபலத் திரைப்பட வரிசையான பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படம் பெண்ணை மையமாகக் கொண்டு உருவாகவிருக்கிறது.

ஜானி டெப் கேப்டன் 'ஜாக் ஸ்பாரோ' கதாபாத்திரத்தில் நடித்த பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படம் கடற் கொள்ளையற்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு புனைகதையாகும். இது வரை ஐந்து பாகங்கள் வரை வெளியாகியுள்ள இப்படம், பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் முக்கிய இடத்தை கைப்பற்றியுள்ளது. இந்தியாவிலும் இப்படத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் அதனை அநாயசமாக கையாளும் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தை பிடிக்காதவர்கள் குறைவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்த இந்த கதாபாத்திரத்தை மையக்கதாபாத்திரமாக வைத்து இந்தப் பட வரிசை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பெண்ணை மையப்படுத்தி பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் புதிய பாகம் உருவாகவுள்ளது. 'பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே' நட்சத்திரம் மார்கோட் ராபி இப்படத்தில் லேடி ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார். அதே சமயம், ஜானி டெப் நடிக்கும் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபீயன் படத்தின் தொடர்ச்சியாக இது இருக்காது என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இப்படம், புதிய கதைக்களத்தையும் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. புதிய பைரேட்ஸ் படத்தின் இயக்குநர் அல்லது வெளியீட்டு தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

'தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்,' 'சூசைட் ஸ்குவாட்' போன்ற திரைப்படங்களின் மூலம் நடிகை மார்கோட் தனது சுவாரஸ்யமான பாத்திரங்களுக்காகவும், தேர்ந்த நடிப்புக்காகவும் அறியப்பட்டவர்.

-முகேஷ் சுப்ரமணியம்

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon