மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

பீட் பாக்ஸ்ஸிங்கில் கலக்கும் இளம்பெண்!

பீட் பாக்ஸ்ஸிங்கில் கலக்கும் இளம்பெண்!

தனித் திறமைகளையும், சிறந்த திறமையாளர்களையும் கண்டெடுக்க இன்றைய சமூக வலைத்தளங்கள் பெரிதும் உதவி செய்து வருகின்றன.

தங்கள் திறமைகளை சரியான பாதையில் எடுத்துச் சென்று, கடினமாக முயற்சி செய்யும் பலருக்கும் வாய்ப்புகள் தேடி வருவதுடன், பாராட்டுக்களும் கிடைக்கின்றன. நடிப்பு, நடனம், பாடல், கைவினைப்பொருட்கள் செய்வது, ஓவியம் வரைவது என்று பல்வேறு திறமையாளர்களை யூட்யூப், டிக் டாக் போன்ற தளங்கள் கண்டெடுத்துள்ளன.

@ardhra.sj

Watch Till The End 😳🔥 Guess The BGM 🎧 Use Headphones##tiktokindia##keyboard##ownvoice##loopstation##tiktok##trending##explore##beatboxer##malayalam

♬ original sound - ardhra.sj

அந்த வகையில் தனது தனித் திறனால் அனைவரையும் வியக்க வைத்து வருகிறார் இளம்பெண் ஒருவர். கேரளாவை சேர்ந்த அவரது பெயர் ஆர்த்ரா. எந்த விதமான இசைக் கருவியும் கையில் இல்லாமல், 'பீட் பாக்ஸிங்' மூலம் வாயால் ஒலி எழுப்பி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

@ardhra.sj

Female Beatbox Challenge🔥💪🏻##fluteboxing ##beatboxing ##fun ##ladybeatboxer ##femalebeatboxer ##ownvoice ##musicstarmalayalam ##musicstar

♬ original sound - ardhra.sj

அதிலும் சாதாரண பீட் பாக்ஸிங் ஆக இல்லாமல் புல்லாங்குழல் இசைத்துக் கொண்டும், கீ-போர்ட் வாசித்துக் கொண்டும் ஒரே நேரத்தில் பீட் பாக்ஸிங் செய்து வித்தியாசமான இசை விருந்தை தனது ரசிகர்களுக்கு அவர் பரிசளிக்கிறார்.

@ardhra.sj

Which Is Your Favorite?😍 ##loopstation ##own ##beatboxing ##flute ##fusion ##kerala ##northindia ##ownvoice ##keyboard ##trending ##tiktok ##trending ##ardhrasj

♬ original sound - ardhra.sj

வாய்ஸ் ரெக்கார்டிங் செய்யும் ஒரு கருவியைப் பயன்படுத்தி தனது க்ரியேட்டிவ் ஐடியாக்களால் அனைவரையும் கவர்ந்து வரும் அவர், டிக் டாக் பிரபலமாக மாறிவிட்டார். 7 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் தொடரப்படும் அவரது டிக் டாக் பக்கம் இதுவரை 70 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon