மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

மாஸ்க் தான் இப்போ மாஸ் ஹீரோ: அப்டேட் குமாரு

மாஸ்க் தான் இப்போ மாஸ் ஹீரோ: அப்டேட் குமாரு

'எல்லா நிறத்திலும், நல்ல தரத்திலும் கிடைக்கும். துவைத்தாலும் நிறம் போகாது'னு ஏதோ பட்டு சேலை விக்கிற மாதிரி மாஸ்க்குக்கும் விளம்பரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இதெல்லாம் பார்த்தா இன்னும் ரொம்ப காலத்துக்கு கொரோனா கூட வாழ்க்கை நடத்த வேண்டியது இருக்கும்னு தோணுதே'ன்னு லாக்டவுன் ஃபேஸ்புக் குரூப்ல ஃப்ரெண்டு ஒருத்தரு சொல்லிட்டு இருந்தாரு. ஆமா உண்மையாவே லாக்டவுன் டைம்ல அறிமுகமான பலரோட முகம் எப்படி இருக்கும்னு கூடத் தெரியாது. மாஸ்க் கழட்டினா அடையாளம் கண்டுபிடிக்கவும் கஷ்டமா இருக்கு. கொரோனா கூட வாழப் பழகுறோமோ இல்லையோ, மாஸ் மாட்டிக்கிட்டே வாழப் பழகுவோம்னு தோணுது. நீங்க அப்டேட்ட படிங்க. நான் புது மாஸ்க் மாட்டிகிட்டு வரேன்.

சப்பாணி

மாடிப்படி வீட்டுக்கு வெளியே இருந்தா மிடில்-கிளாஸ்!

வீட்டுக்கு உள்ள இருந்தா ஹை-க்ளாஸ்

எனக்கொரு டவுட்டு

விஜய் டிவி மாதிரி ஒரு நண்பனை சம்பாதிச்சிறக்கூடாது, நல்லது செஞ்சதை திரும்ப திரும்ப சொல்லி காமிப்பான்..!

ஜோக்கர்

தமிழர்களின் கண்டு பிடிப்புகளில் முக்கியாமானது,

நான்வெஜ் வாங்க கூடும் கூட்டத்தில் "ஞாயி்ற்றுக்கிழமை மட்டும் கொரோனா பரவாது" என்பதே..!!!

சரவணன்.M

கொரோனா ஊரடங்கு நேரத்தில் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வந்ததை வருங்காலத்தில் சாகசங்கள் செய்ததை போல கூறப்போகும் தலைமுறை நாம் தான்.

ரஹீம் கஸ்ஸாலி

சென்னையிலிருந்து வந்தவர்களை, வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவர்களைப்போல பார்க்க வைத்துவிட்டது கொரோனா.

Prabu.G

கொரோனாவோட வாழ பழகுன அளவுக்கு மக்களுக்கு இந்த கறி இல்லாத ஞாயிற்றுக்கிழமையோட வாழ பழகவில்லை போலிருக்கு.

கறிக்கடையில என்ன.. கூட்டம்!!

சிலந்தி

குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் ஆனது..

குழந்தை கையில் கிடைத்த செல்போன்..!!

பழைய சோறு

"மௌனம்" உலகின்

எல்லோருக்குமான

பொது மொழி..!

சரவணன்.M

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக கைகளில் சானிடைசர் தெளித்தற்கு 100 ரூபாய் கட்டணம் வசூல் செய்ததது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் இவ்வளவு கம்மியா இருக்கேன்னு அதிர்ச்சியாகி இருப்பாங்க, வேறொண்ணுமில்லை...!

பிறை சுடர்

உட்காரும் போதும் எழுந்திருக்கும் போதும் மிகவும் 'கஷ்டமாக' இருப்பதன் பெயர் - "ஈஸி" சேர்!

இளைய காஞ்சி

கொரனாவோடு சேர்ந்து வாழ சொன்னிங்கள..

ரேஷன் கார்ட்ல ஒழுங்கா கொரனா பேர் சேர்த்து கொடுங்க..?!

Jegatha

இப்போதெல்லாம்

வெளியில் செல்லும் கணவரிடம்..

சாவியை எடுத்துட்டீங்களா..??

பர்ஸ் எடுத்துட்டீங்களா..??

ஹெல்மெட் எடுத்துட்டீங்களா..??

மொபைல் எடுத்துட்டீங்களா..??

என்ற வரிசையில்..

மாஸ்க் எடுத்துட்டீங்களா..??

என்ற கேள்வியையும் கேட்கிறாள் மனைவி..

சிலந்தி

கூகுள் இல்லாமல் போயிருந்தால்..

புத்தகங்களையும், பெரியவர்களையும் தேடி போயிருப்போம்..!!

-லாக் ஆஃப்

ஞாயிறு, 7 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon