மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

தாய்ப்பாசம்: அசர வைத்த ஐந்தறிவு ஜீவன்கள்!

தாய்ப்பாசம்: அசர வைத்த ஐந்தறிவு ஜீவன்கள்!

'இந்த உலகத்திலேயே தாயை விட சிறந்த உறவும், தாயன்பை விட சிறந்த உணர்வும் வேறெதுவும் இருக்க முடியாது' என்று கூறுவார்கள்.

அது மனிதர்களாகப் பிறந்த நம்மைக் குறித்தது மட்டுமன்று. 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்பார்கள். அதன்படியே சிறு உயிரிகள் முதல் நாம் பார்த்து அச்சமடையும் விலங்குகள் வரை அனைத்திற்கும் தங்கள் குழந்தை என்றால் தனி குதூகலம் தான்.

அவ்வாறு உயிரினங்களின் அளவுகடந்த தாய்ப்பாசம் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல்வேறு வீடியோக்களும் பதிவேற்றப்பட்டு வருவதை நாம் பார்த்திருப்போம். அம்மாவின் பாசத்தையும், அவரது அரவணைப்பையும் மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களும் அனைவரின் அன்பையும் பெற்று விடுகின்றன.

அந்த வகையில் டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டுள்ள இரு வீடியோக்கள் ஐந்தறிவு உயிரினங்களான நாய், குரங்கு போன்றவற்றின் தாயன்பை வெளிப்படுத்தி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

@yashjadhav430

maa ko samjh na hi muskil hai##foryou ##foryoupage ##mom ##maalove ##trending

♬ original sound - anmolyadav9

டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டிருக்கும் வீடியோ ஒன்றில் நாய்க்குட்டி ஒன்று தனது அம்மாவிடம் விளையாட கோபத்தில் இருக்கும் அது தனது குட்டியை விரட்டுகிறது. ஆனால் திடீரென்று பின்னால் ஒரு வாகனம் சென்றதும் தன் குழந்தைக்கு என்ன ஆகிவிட்டதோ என அச்சத்தில் திரும்புகிறது. தன் குழந்தை மீது தாய் நாய் காட்டும் பாசமும், அதனை நினைத்த பதற்றமும் அனைவரையும் அசர வைத்திருக்கிறது.

@dasiboys8swarup

##foryou ##momlover ##youtuber ##tiktokindia ##friendship ##sidhumoosewala ##følløwme ##foryoupage ##youtube ##thanksmaa

♬ original sound - anmolyadav9

அதே போன்று மற்றொரு வீடியோவில், தனது அருகில் வரும் சிறிய குரங்கு குட்டியை வளர்ந்த குரங்கு ஒன்று அடித்து வீசுகிறது. அதில் குட்டிக்குரங்கு. அடிபட்டு தடுமாறிக் கொண்டிருக்கிறது. உடனே தாய்க்குரங்கு அந்த குட்டியை அருகில் அழைத்து நெஞ்சில் சாய்த்து அரவணைத்துக் கொள்கிறது.

அந்த இரு வீடியோக்களும் லட்சக்கணக்கான லைக்குகளைப் பெற்று வருகிறது. அனைவரையும் கவர்ந்த இந்த வீடியோவில் பலரும் தங்கள் அம்மாவைக் குறித்து உருக்கமாகப் பதிவிட்டு வருகின்றனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

ஞாயிறு, 7 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon