மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

ஆக்‌ஷனா? த்ரில்லரா? ஃப்ரெண்ட்ஷிப் ஃபர்ஸ்ட் லுக்!

ஆக்‌ஷனா? த்ரில்லரா? ஃப்ரெண்ட்ஷிப் ஃபர்ஸ்ட் லுக்!

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்-லாஸ்லியா இணைந்து நடிக்கும் ‘ஃப்ரெண்ட்ஷிப்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம், ஏராளமான தமிழ் ரசிகர்களை சம்பாதித்தவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததன் பின்னரும் லாஸ்லியாவும், அவரது காதலும் சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டது. லாஸ்லியா தமிழ் சினிமாவில் கதாநாயகியாகக் களமிறங்குவாரா அல்லது மீண்டும் இலங்கைக்கே சென்று செய்தி வாசிப்பாளராகத் தனது பணியைத் தொடர்வாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

அந்த நேரத்தில் தான், தனது தமிழ் ட்வீட்கள் மூலமாக தமிழர்களை ஈர்த்த பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கும் ‘ஃப்ரெண்ட்ஷிப்’ திரைப்படத்தில் லாஸ்லியா அவருடன் ஜோடி சேர்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது. மேலும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் அர்ஜுனும் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியானதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது.

லாக் டவுன் காரணமாக, படம் குறித்த அப்டேட்டுகள் எதுவும் வெளிவராமல் இருந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் இன்று(ஜூன் 5) வெளியாகியுள்ளது.

கல்லூரி மற்றும் லைப்ரரியின் பின்னணியில் அர்ஜுன், லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் இருப்பதாக போஸ்டர் அமைந்துள்ளது. மேலும் மோஷன் போஸ்டரின் இறுதியில் ஹர்பஜன் சிங் கிரிக்கெட் விளையாடுவதாகவும் இடம்பெற்றுள்ளது. போஸ்டரின் அமைப்புகள் மூலம் இது ஒரு த்ரில்லர் கதையாக இருக்குமா அல்லது ஆக்‌ஷன் ஹீரோ அர்ஜுன் இடம் பெற்றிருப்பதால் ஆக்‌ஷன் கதையாக இருக்குமா என்று ரசிகர்கள் சிந்தித்து வருகின்றனர்.

ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஸ்டாலின் இணைந்து தயாரிக்கின்றனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon