Yதனுஷ் பட இயக்குநர் பெயரில் மோசடி!

entertainment

தனது பெயரைப் பயன்படுத்தி மோசடி செயலில் ஈடுபட்டு வந்த நபர் குறித்து இயக்குநர் கார்த்திக் நரேன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு நடிகர் ரஹ்மான் முதன்மை வேடத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் ‘துருவங்கள் பதினாறு’. இந்தப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். தொடர்ந்து அவரது இயக்கத்தில் உருவான ‘மாஃபியா’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்து வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து அவர் தனுஷின் 43ஆவது திரைப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தத் திரைப்படம் த்ரில்லர் பாணியில் உருவாகவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் இந்தப்படத்திற்கு நடிகர்கள் தேர்வு நடந்துவருவதாகவும், அதில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாகவும் கூறி ஒருவர் பலரிடமும் பண மோசடி செய்துள்ளார். இது குறித்து அறிந்த இயக்குநர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவரையும் எச்சரித்து பதிவிட்டுள்ளார்.

#D43 @karthicknaren_M @gvprakash @SathyaJyothi_ pic.twitter.com/VNPa7K6tYR

— Dhanush (@dhanushkraja) February 2, 2020

அந்தப்பதிவில், **“முக்கியமான தகவல். எனது பெயரைப் பயன்படுத்தி ஒருவர் வாட்ஸ் அப்பில் போலியாக காஸ்டிங் கால் ஒன்றை பரவ விட்டுள்ளார் என்பது எனது கவனத்திற்கு வந்துள்ளது 9777017348 என்னும் வாட்ஸ் அப் எண்ணில் பேசும் அந்த நபர் நான் இயக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வாங்கித்தர பணம் கேட்டு ஏமாற்றி வருகிறார். இந்த நம்பரில் இருந்து ஏதாவது மெசேஜ் வந்தால் உடனடியாக பிளாக் செய்து ரிப்போர்ட் செய்யுங்கள். இந்த மோசடி செய்துவருபவர் யாராக இருந்தாலும் அவர் நரகத்திற்கு செல்வார்”** என்று கோபத்துடன் கார்த்திக் நரேன் கூறியுள்ளார்.

தனுஷுடன் கார்த்திக் நரேன் இணையும் D43 படத்திற்காக மலையாள திரைக்கதை எழுத்தாளர்கள் ஷார்ஃபு மற்றும் சுஹாஸ் கார்த்திக் நரேனுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்தப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் படத்திற்கான டியூன்களை முடித்துவிட்டதாக தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *