மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

90'ஸ் கிட்ஸ் மேல பாசமே இல்லையா?: அப்டேட் குமாரு

90'ஸ் கிட்ஸ் மேல பாசமே இல்லையா?: அப்டேட் குமாரு

லாக் டவுன் தொடங்கி இரண்டு மாசமாகியும் கூட எதுக்கும் கவலைப்படாம என் ஃப்ரெண்டு சந்தோஷமாவே வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டிட்டு இருந்தான். இன்னைக்கு திடீர்னு கறுப்பு கலர்ல ஒரு போட்டோவ மட்டும் ஸ்டேட்டஸா வச்சிருந்தான். 'அப்படி என்னடா துக்க செய்தி?'ன்னு கேட்டா, 'இன்னைக்கு தம்பதியர் தினமாமே. அதுக்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்'ன்னு சொல்றான். என்னடா விஷயம்னு விசாரிச்சா, '80'ஸ் கிட்ஸ் எல்லாம் அவங்க குழந்தைகளுக்கு பிறந்த நாள் கொண்டாடுறாங்க. 2k கிட்ஸ் வளைகாப்பே நடத்துறாங்க. ஆனா 90'ஸ் கிட்ஸ் எங்களுக்கு கல்யாணம் கூட நடக்க மாட்டேங்குது. போதாத குறைக்கு கொரோனா கூட வேற வாழ சொல்றாங்க . அது தான் இந்த எதிர்ப்பு'ன்னு சொல்றான். 'சரிடா இதுக்கு தீர்வே இல்லையா?'ன்னு கேட்டா, 'ஏழாம் அறிவு, காப்பான் அப்டீன்னு சூர்யா நடிச்ச படம் எல்லாம் நிஜமா ஆகுது. அதனால அடுத்ததா 90'ஸ் கிட்ஸ் எல்லாருக்கும் கல்யாணம் நடக்கிற மாதிரி அவர படம் நடிக்க சொல்லுங்க' ன்னு சொல்றான். நீங்க அப்டேட்ட படிங்க. நான் சூர்யா சார் நம்பர் இருக்கான்னு தேடிட்டு வர்றேன்.

சப்பாணி

அமைதியா போக நான் ஒன்னும் வெறுங் கிளி

இல்லடா.."வெட்டுக்கிளி"

~வருங்கால பஞ்ச்

எனக்கொரு டவுட்டு

வெட்டுகிளிக்கெல்லாம் கொடுக்கு மொளைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்..!

பழைய சோறு

சொல்லப்போனால் திருடனும் பூட்டு வியாபாரியும் முகமறியா நண்பர்கள்..!

ரஹீம் கஸ்ஸாலி

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை கோவில் ஆக்கவேண்டும்...!-

அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரையை சிட்னியா மாத்தியது மாதிரியா...?!

சப்பாணி

அம்மா மேல சத்தியம் பன்னுனு சொல்வது

அந்தக்காலத்து உண்மை

கண்டறியும் சோதனை

சரவணன்.M

பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே சமீப காலங்களில் எந்த பேச்சும் இடம்பெறவில்லை

- வெளியுறவுத்துறை அதிகாரிகள்.

சமீப காலம்னா எப்போ...? ட்ரம்ப் கொரோனாவுக்கு மருந்து கேட்டு மிரட்டினாரே... அப்போதிருந்தா...?

கருப்பு மன்னன்

ஒரு மனுஷன் எத்தனை பேர் கூட தான் வாழுபழகுறது இந்த அரசாங்கம் கொடுத்த 1000 ரூபா வச்சிகிட்டு

1. மனைவி

2.கொரோனா

3.வெட்டுகிளி

4. சீனராணுவம்

இதயவன்

அக்டோபரில் இந்தியாவுடன் டி20 கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு

வாங்க வாங்க கப் எனக்கு தான் ~ கொரோனா

ரமேஷ்.ஏ

குளிர்பான பாட்டில்களின் வாய் அமைப்பு பெட்ரோல்/டீசல் பம்புகள் நுழையும் அளவிற்க்கு வடிவமைக்கபட்டவை...!!!

~2 IN 1

Sureka

அறுபடாமலேயே

புறக்கணிக்கப்படுகிறது

இரண்டாவது

செருப்பு !

S.K.Soundhararajan

நான் பதவிக்காக அலைபவனில்லை. - விபி.துரைசாமி

நேற்று திமுகவிடம் எம்.பி பதவி கேட்டேன்னு சொன்னது.!

சிதறல்கள்

பகலில் தூங்கி விட்டு இரவில் இணையத்தில் உருட்டிக் கொண்டிருக்கும் பலர் வேலை இல்லாதவர் இல்லை வேலையே கிடைக்காதவர்கள்..

-லாக் ஆஃப்

வெள்ளி, 29 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon