மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

வார்னரின் விபரீத விளையாட்டு!

வார்னரின் விபரீத விளையாட்டு!

கொரோனா அச்சம் காரணமாக தனது வீட்டிலேயே இருக்கும் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

அந்த வகையில் டிக் டாக் செயலியிலும் தொடர்ந்து வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார். தென்னிந்திய திரைப்பட பாடல்களுக்கு நடனமாடியும், பாகுபலி உள்ளிட்ட கதாபாத்திரங்களை நடித்தும் அவர் பதிவேற்றிய வீடியோக்கள் டிக் டாக்கில் பல லட்சம் லைக்குகளைப் பெற்று பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்ந்து அவர் குடும்பத்துடன் இணைந்து வெளியிட்ட வீடியோக்களையும், பாகுபலியாக அவர் நடித்ததையும் பார்த்த ரசிகர்கள் அவருக்கு 'வார்னர்பலி' என்று பெயர் சூட்டியுள்ளனர். அந்த அளவிற்கு அவரது வீடியோக்கள் பிரபலமடைந்துள்ளன.

வித்தியாசமான வீடியோக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களை சற்று வருத்தமடைய செய்துள்ளது. சுவரில் துளையிடும் ட்ரில்லிங் மிஷினில் மக்காச்சோளத்தைப் பொருத்தி அது வேகமாக சுழலும் போது சாப்பிட முயற்சிப்பதாக அவர் வீடியோ வெளியிட்டிருந்தார்.

@davidwarner31

Eating a corn off a drill 😂😂 just be very careful😢😢 ##copycat ##tiktok ##lifehacks ##fyp ##funny ##drill ##edutok

♬ original sound - davidwarner31

ட்ரில்லிங் மெஷினில் வேகமாக சுழன்று கொண்டிருக்கும் மக்காச்சோளத்தை சாப்பிட முற்படும் பொழுது வார்னரின் பல் உடைவதாக அந்த வீடியோ இருந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

ஆனால் இதை விளையாட்டுக்குக் கூட யாரும் வீட்டில் முயற்சி செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட வார்னர், விழிப்புணர்வுக்காக இவ்வாறு செய்ததாகவும், தான் நலமாக உள்ளதாகவும் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவிற்கு பின்னரும் தொடர்ந்து சுவாரசியமான வீடியோக்களை அவர் பதிவேற்றி வருகிறார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 29 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon