மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

வாஷ்பேசின் ஸ்டாண்ட்: அழகும் பயனும்!

வாஷ்பேசின் ஸ்டாண்ட்: அழகும் பயனும்!

சிறிய வீடுகளில் வசிப்பவர்கள் கூட தாங்கள் விரும்பும் வசதிகள் எல்லாம் வீட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதிலும் குறிப்பாக சமையலறையை எப்படி கச்சிதமாக வைத்துக் கொள்வது என்பது இல்லத்தரசிகளின் முக்கிய யோசனையாகவே இருக்கிறது.

ஆனால் இடப்பற்றாக்குறை உள்ள வீடுகளில் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். அத்தகைய கவலையில் இருப்பவர்களும் தங்கள் வீட்டை அலங்கரித்துக் கொள்ளவும், அதிக இடத்தை மிச்சப்படுத்தவும் டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டுள்ள வீடியோ ஒன்று உதவியாக இருக்கிறது.

சாதாரண ஒரு வாஷ் பேசினை இத்தனை பயனுள்ளதாக மாற்றுதல் என்பதை அந்த வீடியோ உணர்த்துகிறது. வாஷ் பேசினின் அருகில் இரும்பினால் ஆன ஸ்டாண்டு ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அதில் மூன்று இரும்பு கூடைகளை வைத்து அதில் சுத்தம் செய்த தட்டுகள், கண்ணாடி டம்ளர்கள், கோப்பைகளை அடுக்கி வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

@maquillage07

A popular kitchen utensil for you ##kitchen ##foryou ##lifetips ##foryoupage ##fyp

♬ Shooting Stars - Bag Raiders

மேலும் இரு புறங்களிலும் கத்திகளை வைக்கவும், பாத்திரம் கழுவும் சோப்பு போன்றவற்றை வைக்கும் வகையிலும் மிகவும் கச்சிதமாக உருவாக்கப் பட்டுள்ளது.

இவை அனைத்தும் வாஷ்பேசினின் அருகிலேயே அமைந்து இருப்பதால் இடப்பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கிறது. மேலும் பாத்திரங்களை கழுவி எளிதாக அருகிலேயே வைக்கலாம்.

டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோ 5 கோடியே 48 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளதுடன் பலராலும் பகிரப்பட்டும் வருகிறது.

-டிக் டாக் யூஸர்

செவ்வாய், 26 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon