ஜலதோஷம் என்னும் நோய்களின் தலைவன்: அப்டேட் குமாரு

entertainment

‘ஆனா இந்த கொரோனா வந்ததில ஒரு நன்மை இருக்கத்தான் செய்யுது. காய்ச்சல், ஜலதோஷம், இருமல் இதைத் தவிர எவ்வளவு பெரிய நோயா இருந்தாலும் அதையெல்லாம் இப்போ ஒரு பெரிய விஷயமாவே மதிக்க மாட்டேங்கிறாங்க. முன்னாடி எல்லாம் தும்மினா நூறு வருஷம் வாழ்வன்னு சொன்னாங்க. ஆனா இப்போ, எவனாச்சும் தும்மினாலே, அவன சந்தேகமா பாக்குறாங்க’ன்னு வாட்ஸ் அப் பார்வேர்ட் மெசேஜ தானே யோசிச்ச தத்துவம் மாதிரி பக்கத்து வீட்டு தம்பி என்கிட்ட சொல்லிட்டு இருந்தான். ‘சரிடா அதெல்லாம் இருக்கட்டும். எக்ஸாமுக்கு படிச்சிட்டியா?’ன்னு கேட்டேன். அதுக்கு, ‘பத்தாம் கிளாஸ் எக்ஸாம் எழுதணும்னு நினைச்சேன். ஆனா அதுக்கு பத்து மாசம் வெயிட் பண்ணனும்னு தெரியாம போயிடுச்சு. எல்லாரும் லாக் டவுன சம்மர் ஹாலி டே மாதிரி என்ஜாய் பண்றாங்க. நீங்க வொர்க் ப்ரம் ஹோம் பண்ற மாதிரி, நாங்க 24 மணி நேரமும் படிச்சிட்டே ஒர்க் ஃப்ரம் ஹோம் பண்ணிட்டு இருக்கோம்’ன்னு சோகமா சொல்றான். நீங்க அப்டேட்ட படிங்க. நான் லாக் டவுன் எப்போ முடியும்னு வாட்ஸ் அப் குரூப்ல ஒரு விவாதம் பண்ணிட்டு வர்றேன்.

**மாஸ்டர் பீஸ்**

நேசிப்பது அழகு,

நேசிக்கப்படுவது பேரழகு!!!

**Amudu**

லாக்-டௌன் நாட்களுக்கு பிறகு தொப்பைகள் குறையத் தொடங்கினாலும், ஒட்டிய வயிறுகள் அதிகரிக்கும் போல தெரிகிறது.

**Prabhu.G**

வேலை செஞ்சா வியர்க்குதுன்னு சும்மா உட்காந்திருந்தா, சும்மா உட்கார்ந்திருந்தாலும் வியர்க்குது.

கடுப்பாகுமா ஆகாதா..

**Newton**

நடு மத்தி சென்டர் என்பது அர்த்தமற்ற சொற்றொடர் அல்ல. அது ஒரே ஒரு புள்ளியைக் குறிக்கிறது. X-axis ல் நடு, y-axis இல் மத்தி, z-axis இல் சென்டர்

**எனக்கொரு டவுட்டு**

உனக்கு பொண்ணு பார்க்கவா ?

ஹலோ எட்ச்சுச் மீ, பொண்ணு பார்க்குறதுக்கு முன்ன என்கிட்ட கேட்டுட்டு முடிவு எடுங்க.

உன்கூடத்தான் வாழுவேன்னு கொரானோக்கு வாக்கு கொடுத்திருக்கேன்.

**உள்ளூராட்டக்காரன்**

வீட்டை விட்டு கிளம்பும் போது மறந்து வச்சிட்டு போகும் பொருட்களின் லிஸ்டில் புதுசா மாஸ்க் சேர்ந்துடுச்சு

**Pachai perumal**

லாக்டவுண் நேரத்தில் யாரிடமாவது தேதியோ, கிழமையோ கேட்டால் தடுமாறிதான் போகிறார்கள்.

**மயக்குநன்**

கொரோனாவுடன் இன்னும் 2 மாதம் போராட வேண்டியிருக்கும்!- செய்தி.

அதுக்கப்புறம் அதுவே பழகிடும்னு சொல்றாங்க போல..?!

**இதயவன்**

2020 ஒலிம்பிக் மராத்தான் ல்ல இடைவிடாம ஓடிக்கொண்டிருப்பது மருந்துவ துறையும் சுகாதார துறையும் தான்!!

**எனக்கொரு டவுட்டு**

மாஸ்க் போட்டுக்குட்டு வெளியே போனால் கொரோனா வராது என்பது மக்களோட நம்பிக்கைங்கிற மாதிரி,

ஏழு மணிக்கு மேல கடை வச்சிருந்தா கொரோனா பரவிடுங்கிறது போலீஸுடைய நம்பிக்கை.

**-லாக் ஆஃப்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *