மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் வலி மறந்த சேவை!

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் வலி மறந்த சேவை!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வீட்டுக்குள்ளேயே நாம் முடங்கி இருந்த போது, நம்மைப் பாதுகாப்பதற்காக உயிரையும் மறந்து சிலர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

மருத்துவர்கள், செவிலியர்கள், பிற மருத்துவ ஊழியர்கள், ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், ஊடக நண்பர்கள் என அனைவரும் நம்மைப் பாதுகாப்பதற்காக தங்களை மறந்து வேலை செய்து வருகிறார்கள். அவர்களது சேவையைப் பாராட்டும் நாம் பல நேரங்களில் அவர்களின் வலியை மறந்து அலட்சியமாக இருக்கிறோம்.

கொரோனா பரவல் கால கட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் ஒருவர், டிக் டாக்கில் பதிவேற்றி இருக்கும் வீடியோ காண்பவர்களை கண்கலங்க வைப்பதாக இருக்கிறது.

@selvasathambadi

I love My job today corana kit sema 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

♬ original sound - monish2033h

முகத்தில் சில மணி நேரம் மாஸ்க் அணிந்தாலே மூச்சு விடுவதற்கு இயலாமல் நாம் கஷ்டப்படுகிறோம். இத்தகைய சூழலில் உடல் முழுவதையும் மறைக்கும் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு இந்த வேகாத வெயிலிலும் வேலை செய்பவர்களின் நிலையை நாம் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

அந்த வீடியோவில், கையுறை, முகக்கவசம், உடலை மறைக்கும் உடைகள் அணிந்து கொண்டு தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டி வந்த அவர் தனது உடையை சற்று விலக்குகிறார். அவரது உடலில் இருந்து குழாயை திறந்துவிட்ட தண்ணீர் போன்று வியர்வை ஊற்றுகிறது.

அவர் டிக் டாக்கில் பகிர்ந்த இந்த வீடியோ அவர் படும் கஷ்டத்தை தெளிவாக உணர்த்துகிறது. எனினும் தன்னையும், தன் உடல் நிலையையும், தனது குடும்பத்தையும் மறந்து நமக்காக களத்தில் இருக்கும் அவரைப் போன்றவர்களுக்கு அனைவரும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இவர்களின் நலன் கருதியேனும் நாம் அலட்சியமாக இல்லாமல் இருப்பது அவசியம்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

ஞாயிறு, 24 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon