மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 மே 2020

பக்குவமா பழக வேண்டாமா?: அப்டேட் குமாரு

பக்குவமா பழக வேண்டாமா?: அப்டேட் குமாரு

"மச்சான் குமாரு, காலேஜ்ல நம்ம கூட படிச்ச பையன் ஒருத்தனுக்கு இன்னைக்கு காலையில ஷாக் அடிச்சிருச்சுடா"ன்னு ப்ரெண்ட் ஒருத்தன் ஃபோன் பண்ணி சொன்னான். அய்யோன்னு பதறிப்போய் என்ன ஏதுன்னு விசாரிச்சேன். அதுக்கு அவன், "ஏதோ மின்வெட்டு கூட வாழ பழகிக்க நியூஸ்ல சொன்னத, மின்சாரத்தோட வாழப் பழக சொன்னாங்கன்னு தப்பா புரிஞ்சுகிட்டு போய் ஸ்விட்ச் ஆன்ல இருக்கும் போதே ஏதோ கனெக்ஷன் கொடுக்க பாத்திருக்கான். நல்ல வேள பெருசா எதுவும் ஆகல"ன்னு சொல்றான். நீங்க அப்டேட்ட படிங்க. நான் வாட்ஸ் அப் பக்கம் போய்ட்டு வர்றேன்.

கோழியின் கிறுக்கல்

வேலைக்கு வந்த பிறகும் காதுக்குள் ரீங்காரமிடுகிறது தாயக்கட்டையின் ஓசை!!

ரஹீம் கஸ்ஸாலி

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...! - எடப்பாடி

ஒருவேளை ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸ் கைது செய்திருப்பாங்க போல...!

இதயவன்

சீன வங்கிகளளிடம் கடனாக வாங்கிய ரூ.5,400 கோடியை 21 நாட்களில் திரும்ப செலுத்துமாறு அனில் அம்பானிக்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு

என்ன அண்ணாமலை கடனையும் கொடுத்து தள்ளுபடியும் பண்ண நாங்க இந்திய வங்கின்னு நினைச்சிட்டயா?நாங்க சீன வங்கி

புகழ்

இரயில்களில் சீட்டுக்களைக் குறைக்க மாட்டார்களாம்..

விமானங்களில் நடு இருக்கையை எடுத்தால் கட்டுபடியாகாதாம்..

ஆனால் ஆட்டோவில் மட்டும் ஒருவர்தான் பயணம் செய்யணுமாம்..நல்லா இருக்குல்ல இந்த நீதி..

மயக்குநன்

கடந்த சில ஆண்டுகளாகவே திமுக அது துவங்கப்பட்ட நோக்கத்தில் இருந்து விலகிச் செல்ல ஆரம்பித்துவிட்டது!- வி.பி.துரைசாமி.

நீங்களும்தான் ரொம்பவே விலகி பாஜக பக்கம் வந்திட்டீங்களே..?!

ரமேஷ்.ஏ

வாழ்க்கையில நாம எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் எச்சரிக்கையா இருக்க வேண்டிய இடம் டைல்ஸ் ஒட்டின பாத்ரூம்ல தான்...!!!

வெரிபைடு

Manavalan

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார்.

நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.

நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.

“மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள்.

எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.

பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.

அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.”

புத்திசாலித்தனம் நமக்கு மட்டுமே சொந்தமில்லை

இதயவன்

பொருளாதார சலுகை அறிவிப்புகள்,தற்காலிக நிறுத்தம்தான். இன்னும் நிறைய அறிவிப்புகள் வர போகிறது'' # மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர்

கொடுத்த வரைக்கும் போதும் வாங்கி வைக்க இங்க இடமில்லை.

சப்பாணி

கார் ஓட்டிப்பழகும் போதுதான் எல்லா ஜீவராசிகளையும் மதிக்கும் ஒரு ஜென் நிலை வரும்.

Mohanram.ko

கல்யாணம் ஆகலைன்னு சொல்லிட்டு, இப்ப யார் கூட வாழ்ந்து கிட்டு இருக்க?

90s கிட்ஸ் - கொரானா கூட

மித்ரன்

கொரோனா நோய் தொற்றை மக்கள் அலட்சியத்துடன் கருதக் கூடாது - அமைச்சர் செல்லூர் ராஜூ

அது பணக்கார்களுக்கு தானே வரும் நாங்க ஏன் பயப்பட போறோம்..?!

சுஜாதாவை ருசிப்பவருக்காக

அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய கேள்வி பதில்கள்....

கேள்வி: சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே... கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? -

பதில்: கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.

கேள்வி: திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன சார் தொடர்பு?

பதில்: இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும். மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.

கேள்வி: ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை, பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே.

பதில்: திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.

கேள்வி: ‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும் இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே; ‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே பொருந்தும். சிவனுக்கு எப்படி? –

பதில்: சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள கேள்வி கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு மலர் போன்ற பாதம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற பாதம் என்று பொருள் கொள்ளலாமல்லவா? உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகப் புரிந்து கொள்ளுங்களேன்.

கேள்வி: தற்போதைய பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? –

பதில்: கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள் சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான பட்டிமன்றங்கள் நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச் சிரிக்கின்றன.

கேள்வி: லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக் கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா?

பதில்: உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார். இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை; அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில் இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.

கேள்வி: சமையலில் மனைவிக்கு உதவி செய்வீர்களா?

பதில்: சமையல் கலை இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று சமைப்பது. இன்னொன்று சாப்பிடுவது. நான் இரண்டாவது பகுதியில் உதவுவதுண்டு.

கேள்வி: நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதுவது உண்டா? உங்களுடைய ஏதாவது ஒரு மரபுக் கவிதை ப்ளீஸ்!

பதில்: உண்டு. எப்போதாவது. ‘வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு முன்பு தினமணி கதிரில் ஒரு நேரிசை வெண்பா எழுதினேன். அது-

பத்து பவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்

முத்திலே சின்னதாய் மூக்குத்தி - மத்தபடி

பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர

வேண்டாம் வரதட் சிணை!

கேள்வி: ‘சிங்களத் தமிழ்’, ‘சிங்கார சென்னைத் தமிழ்’ ?

பதில்: இலங்கைத் தமிழர்களுடன் கதைக்கும் போது அவர்கள் பாவிக்கும் சில தமிழ் வார்த்தைகள் சொக்கிலேற்றுகளாய்த் தித்திக்கும் என்று நம்மால் அவதானிக்க முடிகிறது. கனகாலமாய் அவற்றைப் படித்து வருவதால் சென்னைத் தமிழைப் பொறுத்தவரை அதிக அளவில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் வட்டாரத் தமிழ் அதுதான்.

கேள்வி: காதல் கவிதை எழுதக் காதலித்துத்தான் ஆக வேண்டுமா?

பதில்: சரிதான்... துப்பறியும் கதை எழுத கொலை செய்ய வேண்டும் என்பீர்களா?

கேள்வி: ஊழல் பெருச்சாளிகள் எங்கிருந்து வருகிறார்கள்?

பதில்: பெரும்பாலும் அரசியல் சாக்கடையிலிருந்துதான்.

கேள்வி: ஆலய உண்டியலில் பணம் போடுவது, ஏழையொருவனுககு அறம் செய்வது. -நற்பயன் தரக் கூடியது?

பதில்: ‘நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈந்தால் அது படமாடும் கோயில் பரமற்கு போய்ச் சேரும் என்கிறார் திருமூலர். ஏழை சப்-போஸ்ட் ஆபீஸ், கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ். ஏழைக்குக் கொடுத்தால் கடவுளுக்குப் போகும்.

கேள்வி: தினமும் பூண்டு சாப்பிட்டால் இதய நோய் வராதாமே?

பதில்: தொடர்ந்து அதன் நாற்றத்தைச் சகித்துக் கொள்வதில் உறுதிபூண்டு செயல்பட்டுப் பாருங்கள்.

கேள்வி: இடமிருந்து வலமாக வாசித்தாலும், வலமிருந்து இடமாக வாசித்தாலும் ஒரே வார்த்தையைத் தரும் ‘விகடகவி’யைப் போல் வேறு ஏதாவது?

பதில்: ‘தேருவருதே’, ‘மோருபோருமோ’ தமிழில் ஒரு முழுக்குறள் வெண்பாவே இப்படி இருக்கிறது. ‘நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ’

கேள்வி: அன்னை ஓர் ஆலயம் என்று கூறுவது ஏன்?

பதில்: ‘கர்ப்ப’க்கிரகம் அங்கிருப்பதால்...

ஜோக்கர்

"ஐந்தில்" வளைய ஆரம்பித்தவள்,

"ஐம்பது வரை வளைந்து" கொண்டிருக்கிறாள்,

"சர்க்கஸ் காரி"

-லாக் ஆஃப்

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

2 நிமிட வாசிப்பு

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

மத மாற்ற விழிப்புணர்வு குறித்து பேசும் ‘ருத்ர தாண்டவம்’!

23 நிமிட வாசிப்பு

மத மாற்ற விழிப்புணர்வு குறித்து பேசும் ‘ருத்ர தாண்டவம்’!

ஃப்ளைட்டில் ஃபைல்: அப்டேட் குமாரு

4 நிமிட வாசிப்பு

ஃப்ளைட்டில் ஃபைல்: அப்டேட் குமாரு

சனி 23 மே 2020