மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 3 ஜுன் 2020

அலமாரியை அழகாக்கி, வேலையை எளிமையாக்க!

அலமாரியை அழகாக்கி, வேலையை எளிமையாக்க!

நாம் தங்கியிருக்கும் வீடும், சுற்றுப்புறமும் சுத்தமாகவும் அழகாகவும் இருப்பது எப்போதும் நமக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தரும்.

அவசரத் தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது நாம் சந்திக்கும் பல பிரச்னைகளில் ஒன்று அலமாரியில் இருந்து விரும்பும் உடையை சரியாக தேர்ந்தெடுப்பது. துவைத்து உலர்த்தி எடுத்து வந்த துணிகளை அலமாரியில் சரியாக அடுக்கி வைப்பதும் பலருக்கும் சிரமமாகவே இருக்கிறது.

இந்த சிக்கல்களுக்கு தீர்வை கண்டுபிடித்து, அதனை வீடியோவாக டிக் டாக்கில் பதிவேற்றியுள்ளனர். ஒன்றின்மீது ஒன்று வெள்ளை நிற சதுர வடிவிலான பிளாஸ்டிக் அட்டைகளில் துணிகளை மடித்து ஒன்றின் மீது ஒன்று அடுக்கி அலமாரியில் அழகாக வைக்கின்றனர்.

@lomileshopaliexpress

♬ original sound - lomileshopaliexpress

அதன் முன்புறத்தில் இருக்கும் சிறிய கைப்பிடியை பயன்படுத்தி விரும்பும் உடையை எளிமையாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதிக இடத்தை அடைத்துக் கொள்ளாமல் இருக்கவும் இந்த வழிமுறை பெரிதும் உதவுகிறது.

அதே போன்று சட்டைகளையும், பனியன்களையும் மடித்து எடுக்க உதவும் சிறிய, சற்று தடிமனான பிளாஸ்டிக் கவர்கள். இவற்றைப் பயன்படுத்தி உடைகளை ஒரு துணிக்கடையில் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது போன்று மிக எளிமையாகவும் அழகாகவும் நாம் ஒழுங்குபடுத்தி வைக்கலாம்.

அவசரமாக வீட்டை விட்டு கிளம்பும் நேரங்களில் அதிக சிரமம் இல்லாமல் உடையை தேர்வு செய்வதற்கு இந்த வழிமுறை பெரிதும் உதவிகரமாக இருக்கும். டிக் டாக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ 19 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்று அனைவரையும் கவர்ந்துள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 22 மே 2020