மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 மே 2020

கொரோனா தாண்டி ஃபோன் செய்வாயா? அப்டேட் குமாரு

கொரோனா தாண்டி ஃபோன் செய்வாயா? அப்டேட் குமாரு

'என்னடா இப்படி ஆள் ஆளுக்கு கார்த்திக்கையும், ஜெஸ்ஸியையும் கலாய்க்கிறீங்க?'ன்னு 'விண்ணைத்தாண்டி வருவாயா' ஃபேன் ஒருத்தரு ரொம்ப கோவமா ஃபேஸ்புக்ல போஸ்ட் போட்டிருந்தாரு. இந்த சர்ச்சையில நாம எட்டிப் பாக்க வேண்டாம்னு அமைதியா இருந்தேன். கடைசியில போஸ்ட் போட்ட இவரையும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. இத எல்லாம் பாக்கும்போது, ஜெஸ்ஸி நம்பர் நாட் ரீச்சபிளாகவே இருந்திருக்கலாம்னு தோணுது. இதப் பத்தி யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது அங்க வந்த பக்கத்து வீட்டு அக்கா, 'நேத்து புயல் வருது பத்திரமா இருங்கன்னு சொன்னாங்க. இன்னைக்கு வெயில் அடிக்கும் வீட்டுக்குள்ளயே இருங்கன்னு சொல்றாங்க. இதில கொரோனா வேற. நாம பழகுறோமோ, இல்லையோ. போற போக்க பாத்தா கொரோனா நம்ம கூடவே வாழ்ந்திரும்னு தோணுது'னு சொல்றாங்க. நீங்க அப்டேட்ட படிங்க, நான் கிளம்புறேன்.

கோழியின் கிறுக்கல்

இந்த வருடம் கோடை விடுமுறை இல்லை,

"கரோனா" விடுமுறை!!

மாஸ்டர் பீஸ்

கோபத்தில் கத்துவதை விட,

கொட்டுவது ஆபத்தானது!!!

பர்வீன் யூனஸ்

ரொம்ப தூரம் போயிட்டியா ராம்..?

இல்ல ஜானு.. E-Pass கிடைக்கல..!

நெற்குப்பை to மகிபாலன்பட்டி

சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஓன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின்

எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது.....

முழு பாடலும்... அதன் பொருளும்....

"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....

சாதலும் புதுவது அன்றே;...

வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;

முனிவின் இன்னாது என்றலும் இலமே;

மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது

கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்...

ஆதலின் மாட்சியின்

பெயோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

– கணியன் பூங்குன்றனார்

"யாதும் ஊரே யாவரும் கேளிர்...."

எல்லா ஊரும் எனது ஊர்....எல்லா மக்களும் எனக்கு உறவினர்என்று நினைத்து,

அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று வாழ்ந்தால் , இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது சுகமானது.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா...."

தீமையும்,நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை. எனும் உண்மையை,உணர்ந்தால்,

சக மனிதர்களிடம்,விருப்பு வெறுப்புஇல்லா ஒரு சம நிலை,சார்ந்த வாழ்வு கிட்டும்.

"நோதலும் தனிதலும் அவற்றோ ரன்ன...."

துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை, மனம் பக்குவப்பட்டால், அமைதி அங்கேயே கிட்டும்...

"சாதல் புதுமை யில்லை.."

பிறந்த நாள் ஒன்று உண்டெனில், இறக்கும் நாளும் ஒன்று உண்டு....*

இறப்பு புதியதல்ல, அது இயற்கையானது எல்லோருக்கும் பொதுவானது....

இந்த உண்மையை உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால் எதற்கும் அஞ்சாமல், வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்.

"வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே

முனிவின் இன்னாது என்றலும் இலமே."

இந்த வாழ்க்கையில் எது, எவர்க்கு, எப்போது, என்னாகும் என்று எவர்க்கும் தெரியாது. இந்த வாழ்க்கை மிகவும் நிலை அற்றது. அதனால்,இன்பம் வந்தால் மிக்க மகிழ்வதும் வேண்டாம்...

துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம். வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்.

"மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ....."

இந்த வானம் நெருப்பாய், மின்னலையும் தருகிறது. நாம் வாழ மழையையும் தருகிறது. இயற்கை வழியில்அது,அது அதன் பணியை செய்கிறது. ஆற்று வெள்ளத்தில், கற்களோடு, அடித்து முட்டி செல்லும்படகு போல, வாழ்க்கையும், சங்கடங்களில் அவர், அவர் ஊழ்படி அதன் வழியில் அடிபட்டு போய்கொண்டு இருக்கும். இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்...

"ஆதலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."

இந்த தெளிவு பெற்றால், பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம். சிறிய நிலையில் உள்ள சிறியவர்களைப் பார்த்து ஏளனம் செய்து இகழ்வதும் வேண்டாம். அவரவர் வாழ்வு அவரவர்க்கு. அவற்றில் அவர், அவர்கள் பெரியவர்கள்...

இதை விட வேறு எவர்

வாழ்க்கைப் பாடத்தை

சொல்லித் தர முடியும்?

மயக்குநன்

சீன, இத்தாலி வைரஸை விட இந்திய வைரஸ் ஆபத்தானது!- நேபாள பிரதமா் கே.பி.ஒலி.

நீங்க உண்மையிலேயே வைரஸை சொல்லலைதானே..?!

ஜோக்கர்

கொரோனோவும் பிரச்சனையும் ஒன்று தான்,

தூரத்தில் இருக்கும்போது தேவையான கால அவகாகம் குடுத்து விட்டு,

அருகில் வந்த பிறகு கால அவகாசமின்றி சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயம் வரும்.

எனக்கொரு டவுட்டு

ஸ்கூல் படிச்சவங்க எல்லாரும் தாங்கள் எழுதிய முதல் ஆங்கில கதை "As i am suffering from fever" என்பதே..!

Prabhu.G

மாசத்துல பத்து நாள் நானும் ஃபுட்டிதான்.

~மிடில்கிளாஸ்

பயம் அறியான்

போராடி வெற்றி அடைவது நம்பிக்கை

போராடிக் கொண்டே வெற்றி அடைவது தன்னம்பிக்கை ஆகும்.

டீ

உணவு சம்பந்தமான எல்லா ஏக்கங்களும் காணாமல் போய், ஊர் சுற்றுவது உள்ளிட்ட எல்லா ஆசைகளும் வறண்டு போய் வேலை மட்டும் நிலைத்தால் போதும் என்ற ஒற்றை நோக்கத்தை மட்டுமே பிரதானமாக்கி விட்டது இந்த கொரோனா.

சப்பாணி

Work from home ல் தப்பித்த அப்பாக்கள்..மகளின்

Worksheet from home ல் மாட்டிக்கொள்கிறார்கள்

மயக்குநன்

டாஸ்மாக் நேரத்தை அதிகரித்தபோதும் வேகம் குறைந்த மது விற்பனை!

அடடா... கடைசியில 'மது விற்பனை' இப்படி 'மெது' விற்பனையா ஆயிடுச்சு போல..?!

-லாக் ஆஃப்

த்ரிஷ்யம் 2 ரீமேக் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜீத்து ஜோசப் ...

3 நிமிட வாசிப்பு

த்ரிஷ்யம் 2 ரீமேக் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜீத்து ஜோசப்

தனுஷின் திட்டங்களால் பாதிக்கப்படும் செல்வராகவன்!

4 நிமிட வாசிப்பு

தனுஷின் திட்டங்களால் பாதிக்கப்படும் செல்வராகவன்!

சுருளி நல்லவனா கெட்டவனா? ஜெகமே தந்திரம் விமர்சனம் !

8 நிமிட வாசிப்பு

சுருளி நல்லவனா கெட்டவனா? ஜெகமே தந்திரம் விமர்சனம்  !

வியாழன் 21 மே 2020