மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 மே 2020

'டாஸ்' போட்டு முடிவெடுப்பவரா நீங்கள்?

'டாஸ்' போட்டு முடிவெடுப்பவரா நீங்கள்?

காதல் மன்னன் படத்தில் வரும் அஜித்குமார் கதாபாத்திரத்தை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? கதையில் இக்கட்டான நிலை வரும்போதெல்லாம் அஜித், தன்னிடம் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிவிட்டு பூவா? தலையா? எனக் கேட்டுப்பார்த்து முடிவு எப்படி இருந்தாலும் அதற்கேற்றார் போல உடனடியாக செயலில் இறங்குவார். சினிமாவையும் கடந்து நிஜத்திலும் இந்தப் பழக்கம் உடையவர்களிடம் ஒரு வெற்றி ரகசியம் உள்ளது.

ஒரு மாற்றத்தை உருவாக்க, தீர்மானத்தை எட்ட நாணயத்தைத் சுண்டும் பழக்கமுடைய நபர்கள், அந்த முடிவைப் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமென்றும், அவர்கள் அந்த முடிவில் அதிக திருப்தி அடைகின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக முடிவெடுத்த அடுத்த ஆறு மாத காலத்திற்கு பின், முன் இருந்ததை விட மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ள தி ரிவியூ ஆஃப் எகனாமிக் ஸ்டடீஸ் இதழில் இது குறித்த கட்டுரை வெளியிடப்பட்டது.

ஒரு வேலையை விட்டு விலகுவது, உயர் கல்வியை நாடுவது, உறவை முடிவுக்குக் கொண்டுவருவது, புகைபிடிப்பதை விட்டுவிடுவது என ஒவ்வொரு நபரும் வாழ்க்கையை மாற்றக்கூடிய விளைவுகளுடன் கடினமான முடிவுகளை எடுக்கும் சந்தர்ப்பத்தை எதிர்கொள்கிறார்கள். இதை குறித்டு அறிய, சிகாகோ பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் ஸ்டீவன் லெவிட் ஒரு வலைத்தளத்தை உருவாக்கினார். அங்கு பலரும் தொடர்ச்சியான கேள்விகளுக்கு பதிலளித்தனர். ஃப்ரீகோனோமிக்ஸ் பரிசோதனைகள்(Freakonomics Experiments) உள்பட பல புத்தகங்களின் இணை ஆசிரியரான லெவிட் கேட்ட கேள்விகளின் சில எடுத்துக்காட்டுகள்: நான் எனது வேலையை குறித்த முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டுமா? நான் டாட்டூ குத்த வேண்டுமா? நான் ஆன்லைன் டேட்டிங் முயற்சிக்க வேண்டுமா? நான் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அல்லது சொந்தமாக வாங்க வேண்டுமா?என அன்றாடம் நாம் எடுக்கும் சாதாரண முடிவுகளில் இருந்து, மிக முக்கியமான முடிவுகள் வரை கேட்கப்பட்டது.

துவக்கத்தில் நாணயத்தை டாஸ் போடாமல் முடிவெடுக்க அழைக்கப்பட்டவர்கள், அடுத்த கட்டமாக டாஸ் போட்டு முடிவெடுக்க அழைக்கப்பட்டனர். நாணயத்தால் தங்களது தற்போதைய நிலையை மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்ட பின், உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் தற்போது அதிகம் என தெரிவித்தனர். அத்துடன் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினர். மேலும் அவர்கள் மீண்டும் தேர்வுசெய்தால் தற்போது எடுத்த அதே முடிவை எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறினார். இரண்டு மற்றும் ஆறு மாத ஆய்வுகளில் கிட்டத்தட்ட ஒவ்வொரு கேள்விக்கும் இது சரியாக இருந்தது. இந்த முடிவுகள் வழக்கமான தேர்வுக் கோட்பாட்டுடன் பொருந்தாது.

எழுத்தாளர் ஸ்டீவன் லெவிட் இது குறித்து கூறும் போது, "'விலகியவர்கள் ஒருபோதும் வெல்ல மாட்டார்கள், வெற்றியாளர்கள் ஒருபோதும் விலக மாட்டார்கள்' என்று சமூகம் நமக்குக் கற்பித்திருக்கிறது. ஆனால் உண்மையில், எனது பரிசோதனையின் தரவுகள், நாம் இன்னும் விலகினால் நாம் அனைவரும் நன்றாக இருப்போம் என்று அறிவுறுத்துகிறது. முடிவெடுப்பதில் ஒரு நல்ல விதிமுறை என்னவென்றால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களால் தீர்மானிக்க முடியாத போதெல்லாம், நிலைமையைத் தொடர்வதை விட, மாற்றத்தைக் குறிக்கும் செயலைத் தேர்வுசெய்க" எனக் கூறினார்.

த்ரிஷ்யம் 2 ரீமேக் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜீத்து ஜோசப் ...

3 நிமிட வாசிப்பு

த்ரிஷ்யம் 2 ரீமேக் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜீத்து ஜோசப்

தனுஷின் திட்டங்களால் பாதிக்கப்படும் செல்வராகவன்!

4 நிமிட வாசிப்பு

தனுஷின் திட்டங்களால் பாதிக்கப்படும் செல்வராகவன்!

சுருளி நல்லவனா கெட்டவனா? ஜெகமே தந்திரம் விமர்சனம் !

8 நிமிட வாசிப்பு

சுருளி நல்லவனா கெட்டவனா? ஜெகமே தந்திரம் விமர்சனம்  !

வியாழன் 21 மே 2020