சுக்கு காபியை கொடுத்து சுத்த விட்டாங்களே: அப்டேட் குமாரு

entertainment

நேற்று தான் டீக்கடை போடுறதப் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம். இன்னைக்கு சொல்லி வச்சது மாதிரியே எங்க அம்மா, ‘இந்த ஊரடங்கு முடிஞ்ச உடனே ஒரு டீக்கடைய போட்டு உக்காரலாம்னு இருக்கேன்’னு சொல்றாங்க. நானும் ஷாக்கில என்னம்மா விஷயம்னு கேட்டா, ‘பால் வாங்க கடை இருக்கா, வீட்டில பால் இருக்கான்னு எத பத்தியும் கவலை இல்லாம ஒரு நாளைக்கு ஆறு ஏழு வாட்டி டீ கேக்குறீங்க. நீங்க ஒர்க் ஃப்ரம் ஹோம் பண்றதுக்கு நான் 24 மணி நேரமும் ஒர்க் பண்ண வேண்டியதா இருக்கு. அதான் டீ போடவும் நிறைய திருட்டு டெக்னிக் எல்லாம் கத்துக்கிட்டேன். டீக்கடை போட்டா ஓஹோன்னு வந்திருவோம்.’னு சொல்றாங்க. மதுக்கடை பக்கத்தில நின்னு வித்தா சுக்கு காப்பிய கூட 300 ரூபாவுக்கு வாங்கி குடிக்கிறாங்க. ஒரு வேள இன்னும் பத்து நாள்ல சரக்கடிக்கிறத மறந்து சுக்கு காபி குடிக்க ஆரம்பிச்சாலும் அதிசயம் இல்ல. நீங்க அப்டேட்ட படிங்க. நான் என்னோட பிசினஸ் பிளான் பத்தி அம்மா கூட டிஸ்கஸ் பண்ணிட்டு வர்றேன்.

**மயக்குநன்**

கொரோனாவுக்கு எதிரான போர்= இப்போதுதான் தொடங்கி இருக்கிறது!- மோடி.

அப்ப… இவ்ளோ நாளா ஒத்திகை மட்டும்தான் பார்த்துட்டு இருந்தீங்களா ஜீ..?

**கண்ணனின் சகி**

நாட்டிற்குள் வந்துவிட்டது – சரி

மாநிலத்தில் வந்துவிட்டது-சரி

ஊருக்குள் வந்துவிட்டது – சரி

தெருவிற்குள் வந்துவிட்டது-சரி

இப்போது பக்கத்து வீடு வரைக்கும் வந்துவிட்டது…

மனம் சற்று சலனம் கொள்ள தான் செய்கிறது

~கொரோனா

**இதயவன்**

உலக நாடுகள் இந்தியாவை கண்டு வியக்கிறது-மோடி

பின்ன வியக்காம கொரானாவை அடக்கம் பண்ணியதா நினைச்சி ஊரடங்குல குத்தாட்டம் போட்டா?!

**கோழியின் கிறுக்கல்**

‘இதுவும் கடந்து போகும்’ என்பது உண்மை தான்!

ஆனால் அதற்கு நாம் என்ன விலை கொடுக்கப் போகிறோம் என்பது தான் முக்கியம்!!

**மெத்த வீட்டான்**

தனிமையில் இனிமை காணமுடியுதோ இல்லையோ

நம்மை காணலாம் !

**கடைநிலை ஊழியன்**

சொல்லும் வார்த்தைகளில் இல்லை வலி , யார் அந்த வார்த்தைகளை சொல்கிறார்கள் என்பதை பொறுத்ததே !!

வலி

**நீர்ப்பறவை**

ஏங்க கொஞ்சம் வெளியே கூட்டிட்டு போங்களேனு எத்தனை வாட்டி கெஞ்சிருப்பேன்..! இப்ப தெரியுதா வலி..நல்லா வீட்டுக்குள்ளே கெட பைத்தியம் புடிக்கட்டும்..இந்த தனிமை நம்மள பாதிக்கல என்பதே உண்மை..!

இல்லத்தரசி

**கனகாம்பரி**

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்…2020

இனி Straight ஆ 2021 தான் போல..

**ரமேஷ்.ஏ**

நடந்தே வந்துவிட்டேன் கால் வலி இல்லை…,வரும் வழியில் லிப்ட் வேண்டி நீட்டிய கையில் மட்டும் கடுமையான வலி….!!!!

**மெத்த வீட்டான்**

நடுநிலைன்னா ஒரு தரப்புக்கு ஆதரவு ஆனால் வெளியே சொல்ல தைரியமில்லைன்னு அர்த்தம் !

**-குமாரு**

லாக் ஆஃப்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *