மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

'கொரோனா வைரஸ் தானாகப் பரவவில்லை': விஜய் ஆண்டனி

'கொரோனா வைரஸ் தானாகப் பரவவில்லை': விஜய் ஆண்டனி

கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றன.

பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் நெருக்கடியான சூழல் நிலவி வருகிறது. ஒரே நாளில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக மக்களும் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

மக்களுக்கு வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பிரபலங்களும் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். அந்தவகையில் சில தினங்களுக்கு முன்னர் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் விளக்கியிருந்தார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வருமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் கொரோனா வைரஸின் கொடிய தீவிரம் குறித்து உணர்ந்து கொள்ளாமல் பலரும் பொதுவெளியில் சாதாரணமாக நடமாடி வருகின்றனர்.

இந்த நேரத்தில், மக்களுக்கு வைரஸின் ஆபத்தை உணர்த்தும் விதமாக விஜய் ஆண்டனி மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், "அன்பிற்குரிய நண்பர்களே, கொரோனா வைரஸ் தானாகப் பரவவில்லை, பொது மக்கள் தான் பரப்புகிறார்கள். அனைவரும் வீட்டிலேயே இருந்து உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு உதவுங்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon