மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

டிக் டாக்: கொரோனா நம்மை மாற்றி விடுமா?

டிக் டாக்: கொரோனா நம்மை மாற்றி விடுமா?

சீனாவில் டிசம்பர் மாத இறுதியில் துவங்கிய கொரோனா வைரஸ் நான்கு மாதங்கள் ஆகியும் தனது கோரத்தைக் குறைக்காமல் காணப்படுகிறது.

சீன மக்கள் இதன் பிடியில் இருந்து ஓரளவு விடுதலையடைந்து விட்டார்கள் என்றாலும் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் மிகப் பெரிய இழப்புகளை சந்தித்து வருகிறது. நமது இந்திய நாட்டில் கூட கொரோனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் குறித்த பயம், ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருப்பது போன்ற காரணங்களால் மக்கள் மன ரீதியாகவும் சோர்வடைந்து காணப்படுகின்றனர்.

தங்களை மகிழ்ச்சிகரமாக வைத்துக் கொள்வதற்கும், இந்த சிந்தனைகளிலிருந்து விடுதலை கிடைப்பதற்கும் பலரும் தங்கள் நேரத்தை பயனுள்ளதாக மாற்றி வருகின்றனர். டிக் டாக்கை ஆக்கப்பூர்வமான ஒரு பொழுதுபோக்காகப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர் . தங்கள் திறமைகளை வெளிப்படுத்த, மக்களை சிரிக்க வைக்க, புதிய விஷயங்களை கற்றுத்தர என பல குறிக்கோளுடன் இந்த தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

கொரோனா மனிதர்களில் மாற்றத்தை ஏற்படுத்துமா? அவ்வாறு ஏற்படுத்தினால் அது என்னவாக இருக்கும் என்பது குறித்த வீடியோ ஒன்று டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. பார்க்கும்போது சிரிக்கவைக்கும் இந்த வீடியோ ஆழமாக நம்மை சிந்திக்கவும் வைக்கிறது. அதில் ஊரடங்கு நேரத்தில் வீட்டிற்கு பீட்சா டெலிவரி செய்ய வரும் நபர் இதன் விலையை கூறுகிறார். வீட்டில் இருப்பவர்கள் பணமாக அவருக்கு வழங்காமல் அதற்கு உரிய டிஷ்யூ பேப்பரை கொடுக்கிறார்கள். எனக்கு டிப்ஸ் எதுவும் கிடையாதா என்று அவர் கேட்கிறார், அதற்கு வீட்டில் இருப்பவர்கள் அவரது கையில் சில துளி ஹேண்ட் சானிட்டைசரை ஊற்றி அதனை டிப்ஸாக வழங்குகிறார்கள்.

@destormpower

People don’t want money anymore. @kingbach @theevelyngonzalez ##coronavirus ##lifehack ##money

♬ original sound - destormpower

ஊரடங்கு உத்தரவு, கொரோனா பற்றிய பயம் போன்றவற்றின் காரணத்தால் வெளிநாடுகளிலும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்கள் கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்களிலும் உள்ள பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு சென்று விட்டார்கள் இதனால் டிஷ்யூ பேப்பர் போன்ற பொருட்கள் மக்களுக்குக் கிடைக்காமல் மிகப்பெரிய ஒரு பற்றாக்குறை ஏற்பட்டது. அந்த உண்மையை நகைச்சுவையாக விளக்கும்படியாக இந்த வீடியோ அமைந்துள்ளது. 60 லட்சம் லைக்குகளை வாங்கி குவித்த இந்த வீடியோ 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பார்க்கப்பட்டுள்ளது.

-டிக் டாக் யூஸர்

சனி, 4 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon