மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 21 அக் 2020

கொரோனா தொற்று: நடிகர் பாலகிருஷ்ணா 1.25 கோடி ரூபாய் நிதியுதவி!

கொரோனா தொற்று: நடிகர் பாலகிருஷ்ணா 1.25 கோடி ரூபாய் நிதியுதவி!

கொரோனா தொற்றுக்கு எதிராக உலகமே போராடி வருகிறது. இந்த நிலையில் அரசுக்கு உதவும் விதமாக பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது பத்து லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியாவிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,500-ஐக் கடந்துவிட்டது. இந்திய மக்களை வீடுகளுக்குள் முடக்கிவைத்து இந்த வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இக்கட்டான சூழலில் நாடே மாட்டித் தவித்துவரும் இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு உதவ மக்கள் நிதி உதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று பல்வேறு பிரபலங்களும் அரசுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா 1.25 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். அதில் 50 லட்ச ரூபாயை ஆந்திர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், 50 லட்சம் ரூபாயை தெலங்கானா மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் அவர் அளித்துள்ளார்.

மேலும் ஊரடங்கு உத்தரவின் காரணமாக வருமானம் இல்லாமல் இருப்பவர்களுக்கு உதவும் விதமாக Corona Crisis Charity (CCC) என்ற அமைப்புக்கு 25 லட்ச ரூபாயை அவர் வழங்கியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் ட்விட்டரில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon