gவிராட்-அனுஷ்காவின் குவாரண்டைன் காதல்!

entertainment

நட்சத்திர ஜோடியான விராட் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் கொரோனா வைரஸ் தொடர்பான எச்சரிக்கைப் பதிவுகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர்.

கொரோனா வைரஸ் எத்தனை தீவிரமானது, அதனால் ஏற்படப்போகும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்தும், மக்கள் கையாள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். அந்த வகையில் உருக்கமான வீடியோ ஒன்றை விராட் கோலி நேற்று(மார்ச் 27) வெளியிட்டார்.

அதில், “உங்களிடம் இன்று ஒரு கிரிக்கெட் வீரனாக நான் பேசவில்லை. இந்தியக் குடிமகனாகப் பேசுகிறேன். மக்கள் கூட்டமாக செல்வது, ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் நடப்பது, அரசாங்கத்தின் அறிவுரைகளை மதிக்காமல் செயல்படுவது போன்றவற்றை சமீப காலமாகத் தொடர்ந்து பார்க்க முடிகிறது. இது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை நாம் சாதரணமாக எடுத்துக் கொண்டுள்ளோம் என்பதையே காட்டுகிறது. நிஜமாகவே இந்தப் போராட்டம் அத்தனை எளிமையானது அல்ல.

அனைவரும் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அரசு கூறும் வழிமுறைகளின் படி அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன். நீங்கள் அலட்சியமாக வெளியே சுற்றுவதால் உங்கள் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்குக்கூட வைரஸ் பாதிப்பு ஏற்படலாம். நமது கடமையை நாம் சரியாக செய்தால் மட்டுமே, இந்தப் போராட்டத்தில் நம்மால் வெற்றி பெற இயலும். உத்தரவுகளை மீறுவது நாட்டின் நலனிற்கு எதிராக செயல்படுவதாகும். இந்த சூழல் சரியாக வேண்டும் என்று நானும் விரும்புகின்றேன்.” என்று உணர்வுப் பூர்வமாகத் தெரிவித்தார்.

இந்த வீடியோ ரசிகர்கள் பலராலும் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில், தனிமைப் படுத்துதலில் கூட நமக்கான சின்ன சின்ன சந்தோஷங்களைத் தேடிக் கொள்ள முடியும் என்பதை மற்றொரு வீடியோவின் மூலம் அவர்கள் உணர்த்தியுள்ளனர்.

விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ள நிலையில், அன்பான தங்கள் காதல் தருணங்களை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அனுஷ்கா ஷர்மா பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், அவர் தனது கணவர் விராட்டிற்கு முடி வெட்டிக் கொடுக்கிறார்.

அதில், “உங்கள் குவாரன்டைன் நாட்களில் இந்த மாதிரியான விஷயங்களுக்கும் நீங்கள் இடம் கொடுங்கள். சமையல் கத்தரிகோலைப் பயன்படுத்தி இதுபோன்று முடிகளை வெட்டிக் கொள்ளலாம்.” என்று விராட் கூறுகிறார். தொடர்ந்து சிறந்த முறையில் ஹேர் கட் செய்து முடி வெட்டித் தந்த தனது மனைவி அனுஷ்காவுக்கு விராட் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறார்.

ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *