gடிக் டாக்: ‘அ முதல் ஃ வரை’ கொரோனா பாடம்!

entertainment

கொரோனா வைரசில் இருந்து நம்மை நாமே காத்துக்கொள்ள வீடுகளிலேயே பாதுகாப்பாக இருந்து வருகிறோம்.

எனினும் நோயின் தீவிரத்தை உணராமலும், அலட்சியப் போக்குடனும் பலரும் வீதிகளில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் ஐந்து லட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பல ஆயிரக்கணக்கான மக்கள் மரணமடைந்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 24,000 ஐக் கடந்து விட்டது.

இந்த நிலையில், கொரோனாவின் தீவிரம் குறித்து எளிய மக்களுக்கும் எளிமையாகப் புரியும் வகையில் டிக் டாக்கில் ஒரு அப்பா-மகள் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அ தொடங்கி ஃ வரையான வார்த்தைகளில் ஆரம்பிக்கும் அறிவுரைகளை அந்தக்குழந்தை விளக்குகிறார்.

@jacksonraj

Dad vs D(L)aughter😂 ##awarenessvideo ##coronavirus ##corona ##LifebuoyKarona ##stayhomestaysafe ##tirunelveli ##nellai ##tamilkids ##children ##oldpeople

♬ original sound – Jacksonraj

**அவர் கூறும் அறிவுரைகளாவன:**

அ- அடிக்கடி கை கழுவு.

ஆ- ஆபத்தை அறிந்து கொள்.

இ- இல்லத்தில் தனித்திரு.

ஈ- ஈரடி தள்ளி நில்.

உ- உற்றாரை ஒதுக்கி வை.

ஊ- ஊரடங்கை மதித்து நட.

எ- எங்கேயும் சுற்றாதே.

ஏ- ஏக்கத்தை அடக்கி வை.

ஐ- ஐயமின்றி அனைத்தையும் உண்.

ஒ- ஒதுங்கி இருக்கக் கற்றுக்கொள்.

ஓ- ஓரிடத்தில் ஓய்ந்திரு.

ஒள- ஒளஷதமில்லை கொரோனாவுக்கு.

ஃ- இஃது அறிதலே இனிய வாழ்வு.

என்பதாக அவர் கூறுகிறார். இந்த வீடியோ அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

**-டிக் டாக் யூஸர்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *