மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மா 2020

‘உயிர் காப்பான் உற்ற நண்பன்’: அப்டேட் குமாரு

‘உயிர் காப்பான் உற்ற நண்பன்’: அப்டேட் குமாரு

‘போலீஸ் உங்கள் நண்பன்னு சொன்னது இத்தனை நாளா புரியல. ஆனா பால் வாங்கப் போனவனக் கூட பாராபட்சமில்லாம அடிச்சு விரட்டும்போது புரியுது. நம்ம உயிர் மேல அவங்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்குன்னு’ அப்டீன்னு சொல்லி ஃப்ரெண்டு ஒருத்தன் வாட்சப்ல மெசேஜ் அனுப்பி இருந்தான். என்னடா பிரச்னை எதுக்கு திடீர்னு இப்பிடி அனுப்புறன்னு கேட்டா, ‘அது ஒன்னும் இல்ல மச்சான் 21 நாளும் டெய்லி ஒரு தத்துவம், கவிதைன்னு எழுதி, ஊரடங்கு முடிஞ்சதும் ஒரு புக்கு வெளியிடலாம்னு இருக்கேன். எழுத ஒரு பேனா வாங்கப் போலாம்னு நெனச்சாலே போலீஸ் அடி தான் ஞாபகத்துக்கு வருது. ஆனாலும் புக் ரிலீஸ் பண்றது உறுதி. என் புக்குக்கு பேரு கூட வச்சிட்டேன்’னு சொன்னான். என்ன பேருடான்னு கேட்டா, ‘தனிமையில் மலர்ந்த தத்துவங்கள்’னு சொல்றான். நீங்க அப்டேட்ட படிங்க. நான் கதை புக் எழுத என்ன ரூல்ஸ்னு பாத்திட்டு வர்றேன்.

இதயவன்

ரஜினியை நீங்கள் தான் கோட்டைக்கு கூட்டிட்டு போக வேண்டும்.- தமிழருவி மணியன்

ஏன் ஜீ அவருக்கு வழி தெரியாதா??அவன் அவன் கொரானா எப்ப கூட்டிகிட்டு போகும்னு பயந்துட்டு இருக்கான் .. இவருக்கு கோட்டைக்கு கூட்டிட்டு போகனுமாம்?!

சரவணன். ℳ

ஷூட்டிங்கு போகாத சிம்பு, பாராளுமன்றத்துக்கு போகாத அன்புமணி, தொகுதிக்கு போகாத எம்எல்ஏக்கள் போல நாமும் வீட்டுக்குள்ளேயே இருப்போம்.

mohanram.ko

வெரைட்டி வெரைட்டியா இருக்காம், பயமா இருக்கு மாமா ...

வைரஸா மாப்ள...

வெரைட்டி வெரைட்டியா உப்புமா மாமா

பரிதி நிலவன்

நேரத்தை காரணம் சொல்லி

நாம் தவிர்த்த அனைத்தும்

நேரத்தை அதிகம் கொடுத்து நம்மை தவிர்த்து செல்கிறது.

சித்ரா தேவி

மிடில் க்ளாஸ் வர்க்கம் என்பது யாதெனில் அயர்ன் செய்யப்பட்ட ஆடையில் திரியும் அரிய வகை ஏழைகளே.

மெத்த வீட்டான்

21 நாட்கள் வீட்டுல இருக்குறது பழகிடும்..22வது நாள் வேலைக்கு போவதைத்தான் திரும்ப பழக்கணும் !

கவிஞன் சம்பத்

நல்லா தூங்கிட்டு இருந்தவன எழுப்பி இந்தா டீ குடி னு கொடுத்தாங்க என் மேல அவ்ளோ பாசமா னு கேட்டேன் இல்லை அதிகமா போட்டுட்டேன் அதான் னு சொல்றாங்க

ச ப் பா ணி

167 ஆண்டுகால வரலாற்றில் நாடு முழுவதும் 3-வது முறையாக ரெயில் சேவை நிறுத்தம்

*1901-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி விக்டோரியா மகாராணியின் இறுதிச் சடங்கிற்காக நிறுத்தியது.

*1948-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி மகாத்மா காந்தியின் இறுதிச் சடங்கிற்காக 2-வது முறையாக நிறுத்தியது.

@sathamklp55

🌾🌾🌾அருமையா எடுத்துச் சொன்னீங்க 🌾🌾##இன்றியமையாதது விவசாயம்

♬ original sound - 🔥murali_bravo🔥

கோழியின் கிறுக்கல்!!

எவ்வளவுக்கு எவ்வளவு Self isolationல் இருக்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் வைரஸ் பரவுவது குறையும்,

அறிவுரையை கேட்காமல் சுற்றிக் கொண்டிருப்பதால் Lockdown அதிகமாகிக் கொண்டே தான் இருக்கும்!

-லாக் ஆஃப்

குமாரு

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

வியாழன் 26 மா 2020