மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மா 2020

‘மனசுக்குள்ள வேண்டினா மட்டும் போதாது’: கோபத்தில் பேபி மானஸ்வி

‘மனசுக்குள்ள வேண்டினா மட்டும் போதாது’: கோபத்தில் பேபி மானஸ்வி

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அலட்சியமாக வெளியே சுத்துபவர்களைத் திட்டி குழந்தை நட்சத்திரம் பேபி மானஸ்வி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் கொரோனா சமூக தொற்றாக மாறிவிட்டால் பெரும் அசம்பாவிதம் நிகழ வாய்ப்பு உள்ளது. அதன் ஆபத்து குறித்து மக்கள் உணரும் விதமாக பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் மக்களில் பலரும் அனாவசிய தேவைகளுக்கும் வீட்டை விட்டு வெளியே சுற்றுவது வருத்தமளிப்பதாக உள்ளது.

அதற்கு தனது கோபத்தைத் தெரிவிக்கும் விதமாக குழந்தை நட்சத்திரம் மானஸ்வி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகளான இவர் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். அவர் வெளியிட்ட வீடியோவில், “டிவியில, பத்திரிகையில எல்லா இடத்திலையும் சொல்றாங்க. ஒரு தடவை சொன்னா நீங்க கேட்கவே மாட்டீங்களா? இப்போ வெளிய போறீங்க. எங்கயாச்சும் தொட்டு திரும்பவும் வீட்டுக்கு வருவீங்க அவங்களுக்கு பரவும் அங்க இருந்து இன்னொருத்தருக்கு பரவும்.

நீங்க வெளிய போகாம இருந்தா தானே எல்லாரும் ஆஃபீசுக்குப் போக முடியும். நீங்க வெளிய போகாம இருந்தா தான் கொரோனா குறையும். அப்போது தான் எல்லாரும் எல்லா இடத்துக்கும் போக முடியும். நீங்களும் ஆஃபீஸ் போக முடியும். நானும் ஸ்கூல் போக முடியும். மனசுக்குள்ள மட்டும் கொரோனா குறையணும், குறையணும்னு வேண்டினா மட்டும் போதாது. எல்லாரும் கையெடுத்து கும்பிடுறாங்க. நான் டிவியில பாத்தேன். ஆனாலும் நீங்க வெளிய போய்ட்டு வர்றீங்க. நீங்க இப்படியே பண்ணிட்டு இருந்தா என்ன மாதிரி குட்டி குழந்தைங்க எல்லாம் எப்படி ஸ்கூலுக்கு போக முடியும். படிச்ச நீங்கள் இப்படி செய்யலாமா?” என்று கோபமாகக் கேட்டுள்ளார்.

இந்த வீடியோவைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

வியாழன் 26 மா 2020