மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மா 2020

‘வாயில்லா ஜீவன்களும் வாழவேண்டும்’: வரலெட்சுமி கோரிக்கை!

‘வாயில்லா ஜீவன்களும் வாழவேண்டும்’: வரலெட்சுமி கோரிக்கை!

பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகை வரலெட்சுமி வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.

வீடுகளில் இருந்து வெளியேவரத் தடை இருந்தாலும் அதையும் தாண்டி வெளியே சுற்றுபவர்களுக்கு கொரோனாவின் தீவிரத்தை உணர்த்தும் விதமாக அந்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “எல்லாரும் வீட்டில் இருப்பீர்கள் என நம்புகிறேன். நானும் வீட்டில்தான் இருக்கிறேன்.சில விஷயங்கள் சொல்ல வேண்டும் என தோன்றியது. சொல்லிவிடுகிறேன், ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம். முதலில் ஒரு குரூப் சுற்றிக் கொண்டிருக்கிறது... கொரோனா எல்லாம் நமக்கு வராது என்று. நான் அவர்களுடன்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். கொரோனா பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

இரண்டாவது, ஊரடங்கின் போது சுமார் 27% பேர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளோம். மீதி அனைவரும் வெளியேதான் இருக்கிறார்கள். இதன் ஆபத்து யாருக்கும் புரிவதில்லை. சமீபத்தில் ‘CONTAGION’ என்ற ஒரு படம் வந்தது. அந்தப் படத்தைப் பாருங்கள். அதைப் பார்த்தாலே இந்த வைரஸ் எப்படியெல்லாம் பரவுகிறது என்று முழுவதுமாகப் புரியும். ரொம்பவே தெளிவாகவே சொல்லியிருப்பார்கள். அக்கம் பக்கத்தில் நிறைய வயதானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் பாதிப்பு நடக்கிறது. அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு உதவி செய்யுங்கள். ஆனால் தள்ளியே நில்லுங்கள்.

வாடகை வாங்குபவர்கள் கவனத்துக்கு. இங்கு நிறையப் பேருக்குச் சம்பளம் கிடையாது. யாருக்குமே வேலை கிடையாது. அதனால் ஒரு மாதத்துக்காவது வாடகையைத் தள்ளுபடி பண்ணுங்கள். அப்படிச் செய்தால் பலருக்கும் உதவியாக இருக்கும். இங்கு தங்க இடமில்லை என்பதால் பலரும் ஊருக்கு ஓடுகிறார்கள். அதை எல்லாம் பார்க்கும்போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. யாரும் எதற்கும் பயப்பட வேண்டாம். கடைகள் எல்லாம் பார்க்கும் போது ஃபுல்லாக இருக்கிறது. அரசாங்கம் கடைகளைத் திறந்து வைக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

இரண்டே விஷயம்தான். ஒன்று, ஜாலியாக வெளியே சுற்றி, கொரோனாவை இந்தியா முழுக்கப் பரப்பி இறப்பு விகிதத்தை அதிகரிப்பது. இரண்டாவது, ஒரு மாதம் வீட்டில் உட்கார்ந்திருங்கள். அடுத்த மாதம் வேலைக்குப் போகலாம். ஆகவே, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நமது நாட்டில்134 கோடி மக்கள் இருக்கிறார்கள். இத்தாலி மாதிரி சின்ன நாடு அல்ல. ஆகவே இங்கு பரவியது என்றால்.. கொஞ்சமாவது புத்தியை உபயோகியுங்கள். தயவுசெய்து வீட்டில் இருங்கள். தேவைப் பட்டால் மட்டும் வெளியே செல்லுங்கள். ஒன்றிணைந்து போராடி வெல்வோம்”. என்று கூறியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று(மார்ச் 25) மற்றொரு வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், “நிறைய பேர் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளை தனியே விட்டு ஊருக்குப் போய்விட்டார்கள். செல்லப்பிராணிகளை தனியே விட்டு விட்டு செல்ல வேண்டாம். செல்லப் பிராணிகளும் ஒரு உயிரினம் தான் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

கொரோனா வைரஸ் பற்றி அந்த விலங்குகளுக்கு எதுவும் தெரியாது. அது மட்டுமன்றி நம்மை சுற்றி, நமது தெருவில் இருக்கும் தெரு நாய்களுக்கும் பிற விலங்குகளுக்கும் முடிந்தால் சாப்பாடு போடுங்கள். உடனே ஒரு குரூப் ஓடி வந்து ‘எங்களுக்கே சாப்பாடு கிடையாது. நாங்கள் எப்படி விலங்குகளுக்கு சாப்பாடு போட முடியும்’ என்று கேட்பார்கள். நான் எல்லோரையும் சொல்லவில்லை. உங்களால் முடிந்தால் மட்டும் தயவு செய்து நாய்களுக்கு மற்ற விலங்குகளுக்கும் சாப்பாடும் தண்ணீரும் கொடுங்கள். பாவம் அவர்களுக்கு வாயில்லை. அவற்றிற்கு கேட்கவும் தெரியாது. நிறைய விலங்குகள் தனித்துவிடப்பட்டிருக்கின்றன. அவையும் இந்த உலகத்தைச் சேர்ந்தவை தான். தயவுகூர்ந்து உங்கள் செல்லப்பிராணிகளை தனியே விட்டு செல்லாதீர்கள்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த இரு வீடியோக்களும் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

வியாழன் 26 மா 2020