மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மா 2020

டிக் டாக்: விளையாட்டு உடற்பயிற்சி!

டிக் டாக்: விளையாட்டு உடற்பயிற்சி!

நோய் குறித்த பயம், பிற நாட்டவராக இருந்தாலும் சக உயிர்களை இழப்பதன் சோகம் என்று சமீப காலமாக பலரிலும் ஒருவித மன அழுத்தம் காணப்படுகிறது.

தற்போது 21 நாட்கள் வீட்டுக்குள் முடங்கியே இருக்க வேண்டும் என்ற நிலையில், பலரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். அதில் முக்கியமான ஒன்று எப்படி உடற்பயிற்சி செய்வது என்பதுதான். உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டாலும், அத்தகைய உபகரணங்களுடன் கூடிய பூங்காக்களில் போய் வரலாம் என்று ஆரம்பத்தில் நினைத்தார்கள். ஆனால் அவையும் மூடப்பட்டு வீட்டில் இருந்து வெளியே வருவதே ஆபத்து என்னும் நிலையில் நாம் இருக்கிறோம்.

குறைந்தபட்சம் உடற்பயிற்சி செய்யத் தேவையான உபகரணங்கள் வீட்டில் இருந்தால் கூடப் போதும். ஆனால் அதுவும் இல்லாதவர்கள் பெரும் கவலை அடைந்துவருகிறார்கள். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமான சில உடற்பயிற்சி விளையாட்டுகள் குறித்து டிக் டாக் பயனாளி ஒருவர் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

@hema377

How to spend time with kids @ home because of corona watch this till End 👆

♬ original sound - hemaprakash

குழந்தைகளுடன் தவழ்ந்து செல்வது, அவர்களுடன் உடல் உழைப்பு தேவையான விளையாட்டுகளை விளையாடுவது என்பது மனதிற்கு மகிழ்ச்சியும், உடலுக்கு வலிமையும் அளிப்பதாக உள்ளது.

இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளதுடன் 67 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

வியாழன் 26 மா 2020