‘கொரோனாவின் தீவிரம் குறித்து உணரவில்லை’: சிவகார்த்திகேயன்


கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுமைக்கும் வரும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் இந்த வைரஸ் பரவுதலைத் தடுக்கும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழு ஈடுபாட்டுடன் எடுத்து வந்தாலும் மக்கள் அதன் தீவிரத்தை முழுதாக உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. மக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Let’s stay indoors and fight Tis 🙏 💪#StayAtHomeSaveLives @Vijayabaskarofl @MoHFWINDIA pic.twitter.com/IgxgngeL6X
— Sivakarthikeyan (@SivaKartikeyan) March 24, 2020
அந்த வீடியோவில், “தன்னலமற்று உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள், மற்ற அரசு அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்புத் துறை, நமக்கு நல்ல தகவல்களைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக களத்தில் இறங்கி வேலை செய்யும் ஊடகவியலாளர்கள், அத்தியாவசிய பொருட்கள் நமக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேலை செய்துவரும் ஹீரோக்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் மற்றும் சல்யூட். அவர்கள் அனைவருக்கும் மக்களாகிய நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நான் உங்களிடம் கேட்டுக்கொள்வதும் இன்றே ஒன்று தான்.
வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்பது தான். அவசரம் என்றால் மட்டும் வெளியில் வாருங்கள். இன்னும் கொரோனா பற்றிய தீவிரத்தை உணராமல் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் பத்து பேருக்காவது இந்த வீடியோ போய் சேரும் என்பதற்காகத் தான் தான் இதனை வெளியிடுகிறேன்.
வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்தாலே கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து அனைத்தையும் முறியடிக்க முடியும். நான் நம்புவது ஒன்றே ஒன்றுதான் உலகின் தலைசிறந்த சொல் ‘செயல்’. செய்து காட்டுவோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.