மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 மா 2020

ஒலிம்பிக்ஸ் ஒத்திவைப்பு: வரலாற்றை மாற்றும் ‘கொரோனா’!

ஒலிம்பிக்ஸ் ஒத்திவைப்பு: வரலாற்றை மாற்றும் ‘கொரோனா’!

உலகம் முழுவதிலும் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

4 லட்சத்திற்கும் அதிகமானவர்களை பாதித்து பதினெட்டாயிரம் உயிர்களைக் கொன்று குவித்திருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்கள் அனைவரையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த கொடிய வைரசின் பிடியில் இருந்து தப்பிக்க இந்தியாவாலும் இயலவில்லை. இதுவரை இந்தியாவில் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதுடன், 10 மரணங்களும் நிகழ்ந்துவிட்டது.

இத்தகைய பெரும் பாதிப்பின் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் உலகம் முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் மாற்றி வைக்கப்பட்டுள்ளதுடன் மக்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒலிம்பிக் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

2020ஆம் ஆண்டு ஜூலை 24 தொடங்கி ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வரையிலும் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஜப்பான் நாட்டிலும் கொரோனாவின் தாக்கம் பரவலாகக் காணப்பட்ட நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கள் நாட்டு வீரர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று கனடா ஏற்கனவே அறிவித்திருந்தது. போட்டிகள் ஒத்தி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது குறித்த ஜப்பானின் பரிந்துரையை ஒலிம்பிக் கவுன்சில் ஏற்றுக்கொண்டது. அத்துடன் இந்த போட்டிகள் அடுத்த வருடம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் இவ்வாறு ஒத்திவைக்கப்படுவது இது முதன்முறையாக அல்ல. 1916ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதல் உலகப்போரின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 1940ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் சீனா-ஜப்பான் போரின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 1944ஆம் ஆண்டு லண்டனில் நடைபெறவிருந்த போட்டிகள் இரண்டாம் உலகப்போரின் காரணமாகவும், 1972ஆம் ஆண்டு மியூனிக்கில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் தீவிரவாதத் தாக்குதலின் காரணமாகவும் ஒத்திவைக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் குண்டு வெடிப்பு தாக்குதல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பிறகு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டிகள் தற்போது கொரோனா வைரசின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. போர், தீவிரவாதத் தாக்குதல் போன்ற மனித காரணங்களால் மாற்றி வைக்கப்பட்டிருந்த கோடை ஒலிம்பிக் போட்டிகள், ஒரு வைரஸ் அல்லது நோய்த்தாக்குதலின் காரணமாக ஒத்திவைக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதன்முறை.

ஜப்பானில் 1940ஆம் ஆண்டுக்குப் பின்பு இரண்டாவது முறையாக இந்த வருடமும் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

தியேட்டர் பாணியில் ஓடிடி!

5 நிமிட வாசிப்பு

தியேட்டர் பாணியில் ஓடிடி!

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

3 நிமிட வாசிப்பு

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான  ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

3 நிமிட வாசிப்பு

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

புதன் 25 மா 2020