அஜித்துடன் ரேஸுக்குத் தயாராகும் வலிமை ஹீரோயின்!

entertainment

‘வலிமை’ படத்தின் கதாநாயகி ஹூமா குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தத் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு, அஜித் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்னும் தகவல் பெரும் உற்சாகத்தை அளித்தது.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உலகநாடுகள் பலவும் முடங்கியுள்ள நிலையில், இந்தியாவிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்படப் பல மாநிலங்களிலும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதுடன், திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ‘வலிமை’ திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் கதாநாயகி ஹூமா குரேஷி புல்லட் ஓட்டுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் மற்றும் வீடியோ ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. வலிமை திரைப்படத்தில் அவர் புல்லட் ஓட்டும் காட்சிகள் இடம்பெறும் எனத் தெரிகிறது. நடிகர் அஜித் சிறந்த பைக் ரேஸர் என்பதால், அவருக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு ஹூமா குரேஷியின் பைக் ஸ்டண்ட் காட்சிகள் படத்தில் இடம் பெறும் என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ஹூமா குரேஷி தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளார்.

புல்லட் ஓட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், “வாழ்க்கை என்பது தினமும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் இருக்கிறது. அத்துடன் உங்கள் பயத்தை மீறுவதிலும்” என்று பதிவிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவிற்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *