மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

டிக் டாக்: ஓல்ட் எப்போமே கோல்ட் தான்!

டிக் டாக்: ஓல்ட் எப்போமே கோல்ட் தான்!

பிஞ்சுக் குழந்தைகள் முதல் வயதான முதியவர்கள் வரைப் பலரும் டிக்-டாக் செயலியைப் பயன்படுத்தி வருகிறார்கள். வாய்ப்புகளை தேடுவதற்காக மட்டுமல்லாமல் தவறவிட்ட வாய்ப்புகளை மீட்டெடுப்பதற்காகவும் சிலர் இந்த தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்

இவற்றில் சில வீடியோக்களைப் பார்க்கும் பொழுது ஒரு சிறந்த நடிகையை நமது தமிழ் சினிமா தவற விட்டதே என்றும், ஒரு நல்ல நடனக் கலைஞரை வெள்ளித் திரையில் பார்க்க முடியவில்லையே எனவும் தோன்ற வைக்கும் அளவிற்கு பலரது திறமையும் இருக்கிறது. வயது நிச்சயம் ஒரு எண் மட்டும்தான் என்பதை மீண்டும் நினைவு படுத்தி சிலர் தங்களது வயோதிகத்திலும் வீடியோக்கள் செய்து வருகின்றார்கள்.

அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கே போட்டியாக அமையும் விதத்தில் சிலர் வீடியோக்களைப் பதிவேற்றுகின்றனர்.

‘வயதாகிவிட்டது ஒரு ஓரமாகப் போய் இருக்க வேண்டியது தானே?’ என்ற கேள்வியைப் பல முதியவர்கள் எதிர்கொள்ளும் இந்த சூழலில். வயதான அம்மா-அப்பாக்களின் சிறு சிறு ஆசைகளையும், கனவுகளையும் உற்றாரும் உறவினரும் சிதைக்கும் பொழுது, மறைந்து நின்ற தன் பாட்டியின் திறமையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர் சில பேரன்கள்.

@brounboii

Wait for end 👌❤ bamma garu dishti thaakuthademo meku 😍 ##blooper ##duet with @akshaypartha ##blooper ##trending ##shannu01 ##vijayawada

♬ original sound - rajpriyan007

அவர்கள் செய்து வரும் ஒவ்வொரு வீடியோக்களும் மில்லியன் கணக்கில் வியூவ்ஸும், பல லட்சக்கணக்கான லைக்குகளையும் பெறுகிறது. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்ற கருத்தை தொடர்ந்து உணர்த்தி வரும் டிக் டாக், வருடங்கள் கடந்தாலும் பரவாயில்லை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பதையும் உணர்த்துகிறது.

-டிக் டாக் யூஸர்

வெள்ளி, 28 பிப் 2020