மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

45 லட்சம் செலவில் அருண் விஜய்க்கு தயாராகும் செட்!

45 லட்சம் செலவில் அருண் விஜய்க்கு தயாராகும் செட்!

எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறாமல் அருண் விஜய் நடிப்பில் வெளியான “மாஃபியா” திரைப்படம் ஹார்ட் டிஸ்குகளுக்குள் சென்றிருக்கிறது. ஆனாலும், மாஃபியா ஓடிய தியேட்டர்களில் கோயம்புத்தூர், மதுரை நகரங்களில் ரசிகர்களை நேரடியாக சந்திக்க, அவர்கள் காட்டிய அளவிலா அன்பு மற்றும் உற்சாக வரவேற்பில் மனதெங்கும் புத்துணர்வு பரவி, பெரு மகிழ்ச்சியில் மிதந்து வருகிறார் அருண் விஜய். தற்போது வெற்றியை கொண்டாடும் நேரமே இல்லாமல் “சினம்” படத்தின் மிகப்பெரிய ஆக்‌ஷன் காட்சிக்கு தயாரகிவிட்டார் அருண் விஜய். இந்த ஆக்‌ஷன் காட்சிக்காக 45 லட்சம் செலவில் மிகப் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் GNR குமரவெலனிடம் இந்த செய் குறித்து விசாரித்தபோது “இந்த ஆக்‌ஷன் காட்சி படத்தில் மிக முக்கியமான கட்டத்தில் நடைபெறக்கூடிய, கதையில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடியது. இந்த காட்சி பற்றி விவாதித்த போது இதனை நேரடியாக பொது இடத்தில் எடுப்பது இயலாத காரியம் என்பது தெரிந்தது. ஆதலால் இதனை அரங்கு அமைத்து எடுக்கலாம் எனத் திட்டமிடப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் விஜயகுமார் இதற்கு ஒத்துக்கொள்வரா? மிகப்பெரிய செலவு செய்ய வேண்டி வருமே எனத் தோன்றியது. ஆனால், நானே எதிர்பாராத விதமாக “செலவு முக்கியமில்லை படத்தின் தரமே முக்கியம். காட்சி சரியாக திரையில் வரவேண்டும்” என அவர் சொன்னார். கலை இயக்குநர் மைக்கேல் மற்றும் அவரது குழு பிரமிப்பான உழைப்பில் தத்ரூபமாக, உண்மையான இடம் போலவே அரங்கை உருவாக்கினார்கள். இந்த ஆக்‌ஷன் காட்சியை சண்டைப்பயிற்சி இயக்குநர் சில்வா வெகு அற்புதமாக வடிவமைத்துள்ளார். அருண் விஜய்யின் ஸ்டைலிஷ் தோற்றமும் பெரும் அர்ப்பணிப்பும் இக்காட்சியை வேறு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. இந்த ஆக்‌ஷன் காட்சியில் அருண் விஜய்யுடன் காளி வெங்கட்டும் இணைந்து நடித்துள்ளார். இப்படப்பிடிப்புடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது” என்று கூறினார்.

Movie Slides Pvt Ltd சார்பில் R.விஜய குமார் இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் “சினம்” படத்தை எழுதி இயக்குகிறார். அருண் விஜய் காவல் அதிகாரி பாத்திரத்தில் நாயகனாக நடிக்க பாலக் லால்வானி நாயகியாக நடிக்கிறார். காளிவெங்கட் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். “சகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா”படப்புகழ் ஷபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய ராஜா முகம்மது படத்தொகுப்பு செய்கிறார். மைக்கேல் கலை இயக்கம் செய்ய சில்வா சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். மதன் கார்கி, பிரியன் ஏக்நாத் பாடல்கள் எழுத பவன் வடிவமைப்பை மேற்கொள்கிறார்.

புதன், 26 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon