fடிக் டாக்: மனிதம் கற்பிக்கும் மிருகம்!

entertainment

பொதுவாக மனிதர்களாகிய நாம் எதாவது கொடூரமான செயல்களைச் செய்யும் போது, ‘மிருகத்தனமாக நடந்து கொள்கிறார்’ என்று கூறுவார்கள். ஆனால் மனிதர்களுக்கே பாடம் கற்பிக்கும் நல்ல மனம் கொண்ட சில விலங்குகளும் இருக்கின்றன.

‘உன்ன பெத்து வளத்ததுக்கு நாலு மாடு வாங்கி மேச்சிருக்கலாம்’, ‘ஒரு நாய் வாங்கி வளத்திருந்தா எப்போதும் நன்றியோட இருந்திருக்கும்’ போன்ற வசனங்களைப் பலரும் பலரிடமும் கூறக் கேட்டிருப்போம். உண்மை என்ன வென்றால் விலங்குகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் பகிர்தல் என்ற பாடத்தைக் கற்பிக்கும் ஒரு குரங்கின் வீடியோ அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

@mokshabybee

He’s sharing ❤️‼️ #tortoise #animalsreact #chimp #animalsoftiktok #sharing #chimpanzee #cute #love #fyp #foryou #foryoupage

♬ Nom Nom Nom Nom Nom Nom Nom – Parry Gripp

தான் உண்பதற்காக அளிக்கப்பட்ட ஆப்பிளை, அருகில் இருக்கும் ஆமைக்கும் ஊட்டி மகிழும் குரங்கு ஒன்றின் வீடியோ டிக் டாக் தளத்தில் வலம்வருகிறது.

ஆச்சரியத்தைத் தருவதாக மட்டுமல்லாமல், நாம் மறந்து போன சில மனங்களையும் நினைவில் கொண்டுவருகிறது. 12 லட்சம் பேரால் லைக் செய்யப்பட்ட அந்த வீடியோவை இதுவரை ஒரு கோடியே 70 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ வியப்பைத் தந்ததோடு மட்டுமல்லாமல் பெரும் பாடம் கற்பித்திருப்பதாக்வும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

**-டிக் டாக் யூஸர்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *