மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

சாகித்ய அகாடமி விருது பெறும் கே.வி.ஜெயஸ்ரீ

சாகித்ய அகாடமி விருது பெறும் கே.வி.ஜெயஸ்ரீ

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் கே.வி. ஜெயஸ்ரீக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கிய துறையில் சிறந்த படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம் எனப் பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இன்று(பிப்ரவரி 25) சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த வருடத்தின் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கான விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் பிரபல எழுத்தாளர் மனோஜ் குரூர் எழுதிய ‘நிலம் பூத்து மலர்ந்ந நாள்’ நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மக்களின் வாழ்வியல் கதைகளை இசையுடன் பாடி நடக்கும் பாணார்களின் வாழ்வாதாரத்தை விளக்குவதாக இந்த நாவல் உள்ளது.

இந்த நிலையில் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பாளார் கே.வி.ஜெயஸ்ரீ சாகித்ய அகாடமி விருது பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருது பெறுவது குறித்து கே.வி.ஜெயஸ்ரீ கூறும்போது, “பாணர்கள் மற்றும் கூத்தர்களின் வாழ்வியலை தத்ரூபமாக பதிவு செய்த இந்த நாவல் விருது பெறவிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

செவ்வாய், 25 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon