மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

டிக் டாக்: வைரல் லிஸ்ட்டில் ஒரு நாய் நடிகன்!

டிக் டாக்: வைரல் லிஸ்ட்டில் ஒரு நாய் நடிகன்!

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தங்கள் திறமைகளை வெளிக்காட்டவும், பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுத்திவரும் டிக் டாக் உலகில், சில விலங்கு மற்றும் பறவை நண்பர்களும் வலம்வருகின்றனர்.

தமிழ் சினிமா உட்பட பல மொழி திரைப்படங்களிலும் நாய், பூனை, கிளி, குரங்கு என பல்வேறு விலங்கினங்களும் நடித்துப் பார்த்திருப்போம். ஆனால் பெரும்பாலும் அவை வாயசைத்துப் பேசுவதைப் பார்த்திருக்க மாட்டோம். அப்படி ‘நாய் பேசுமா’ என்று ஆச்சரியமாகக் கேட்பவர்களுக்கு, ‘பேசலேன்னாலும் கரெக்ட்டா லிப் சிங் கொடுத்து நடிக்கும்’ என்பதை செய்கையால் உணர்த்தியுள்ளார் ‘விஜய்90மவுக்ளி’ (Vijay90Mowgli) என்னும் டிக் டாக் பயன்பாட்டாளர்.

@vijay90mowgli

♬ original sound - அ.மணிவாசகன்

தன்னுடைய நேரம் வரும்வரை அசைவுகள் எதுவும் தராமல் காத்திருந்து, டயலாக் வந்ததும் அது முடிவதற்குள் வாயசைக்கும் இந்த மவுக்ளியின் செயல் டிக் டாக் பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்துள்ளது.

@vijay90mowgli

♬ original sound - sai dharsan 💞💞💞💞

இது சாதாரணமாக வந்துவிட்ட திறமை அல்ல என்பதையும், ‘பெரும் முயற்சி மற்றும் உரிய பயிற்சியின் பலனாகக் கிடைத்ததே என்றும்’ மவுக்ளியை நடிகராக மாற்றிய அவரது உற்ற நண்பரும், உரிமையாளருமான விஜய் கூறுகிறார்.

@vijay90mowgli

♬ devikavjthatnaughtypondatty - 👑 Devika 👑

இத்தனை திறமையாக அனைவரையும் ரசிக்க வைக்கும் இவர்களது டிக் டாக் ஐடி இதுவரை 8 லட்சம் ஃபாலோவர்ஸ்களையும், ஒரு கோடியே நாற்பத்து நான்கு லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. திறமையான மனிதர்கள் மட்டுமல்ல, திறமையான மனிதர்களால் திறம்பட பயிற்றுவிக்கப்பட்ட விலங்கினங்களுக்கும் சரியான அங்கீகாரம் கிடைக்கட்டும்.

-டிக் டாக் யூஸர்

செவ்வாய், 25 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon