lடிக் டாக்: இந்திய நடிகைகளுக்கே போட்டியா?

entertainment

நடிப்புத் திறமையை வெளிக்காட்டுவதற்காக மட்டுமின்றி நகைச்சுவைத் திறமைக்கான மேடையாகவும் சிலர் டிக் டாக் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

முன்னணி டிவி சானல்களின் முக்கிய போட்டி நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் கூட, டிக் டாக் வழியாக வாழ்க்கையைத் தேடியுள்ளனர். தமிழ் சினிமாக்களில் இடம்பெற்ற பிரபல நகைச்சுவைக் காட்சிகளை நடித்துக் காட்டி சிலர் சிரிக்க வைக்கின்றனர் என்றால் சிலர் சீரியசான காட்சிகளைக் கூட காமெடியாக்கி கைத்தட்டல் வாங்குகின்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சில இளைஞர்கள், ‘நாங்களும் நகைச்சுவை கிங்’ தான் என்பதைத் தங்கள் வீடியோக்களால் உணர்த்தியுள்ளனர். எம்.எஸ்.கே சரத் என்ற டிக் டாக் ஐடியில் தமிழ் இளைஞர்கள் சிலர், சிம்ரன், ஐஸ்வர்யா ராய், தபு என முன்னணி நடிகைகள் நடித்த ஹிட் பாடல்களை தங்கள் பாணியில் நடித்துக் காட்டி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர்.

@msk_sarath

competition to Simran 🙄 intha Praveen video panna vidama sirippu kamichute irunthan 🤪 #kanyakumarian #callfortamil

♬ original sound – Msk_sarath

வீடியோக்களைப் பார்ப்பதற்கு முன்பாகவே ‘சிம்ரனுக்குப் போட்டி, ஐஸ்வர்யா ராய்க்குப் போட்டி, ஸ்ரீதேவிக்குப் போட்டி’ என்ற கேப்ஷன் மூலம் சிரிக்க வைக்கின்றனர்.

@msk_sarath

Competition to Tabu 🙄 low budget song 😁 mind voice: palla kamichu ipdi close pannitane #callfortamil #kanyakumarian

♬ original sound – Msk_sarath

தன்னுடன் நடிப்பது பெண் வேடமிட்ட, அதுவும் கிண்டலாக வேடமிட்ட ஒருவர் என்பதை மறந்து உண்மையான காதலை அவருடன் நடிக்கும் இளைஞர் வெளிக்காட்டுவது தான் இன்னும் சிரிப்பை வரவைக்கிறது.

@msk_sarath

Competition to Sridevi 🙄 low budget song #telugu #telugusong #sridevi #kanyakumarian #chiranjeevi

♬ original sound – sureshuser192143

சிரஞ்சீவி, ஸ்ரீதேவி நடித்த தெலுங்கு பட பாடலுக்கு நடிக்க மட்டுமின்றி நடனமாடியும் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளனர்.

@msk_sarath

competition to Aishwarya Rai and Eiffel tower 🙄 ithukaha Paris la No.. Enga oor Eiffel tower ithan.. low budget song.. #kanyakumarian #callfortamil

♬ original sound – Msk_sarath

பிரசாந்த்-ஐஸ்வர்யா ராய் நடித்த ‘ஜீன்ஸ்’ படத்தில் உலக அதிசயங்களைப் பட்டியலிட்ட ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்’ பாடலை நடித்து உள்ளூர் அதிசயத்தை உணர்த்தியுள்ளனர், உங்க ஊர்ல ‘ஈஃபில் டவர் இருந்தா, எங்க ஊர்ல செல்ஃபோன் டவரே இருக்கு’ என்பதாக இவர்கள் நடித்துக் காட்டியது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

செல்ஃபோனில் குட்டித் திரைக்குள் நடித்துவரும் இவர்களது திறமை, சின்னத்திரையையும் அப்படியே வெள்ளித் திரையையும் அடையும் வாய்ப்புகள் கிடைக்கட்டும்.

**-டிக் டாக் யூஸர்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *