மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

வல்லரசுன்னாய்ங்க, புருடா அரசால்ல இருக்கு :அப்டேட் குமாரு

வல்லரசுன்னாய்ங்க, புருடா அரசால்ல இருக்கு :அப்டேட் குமாரு

நானே சண்டே அன்னைக்கு அமாவாசை வந்துருச்சேன்னு கடுப்புல உக்காந்திருக்கேன். இதுல ஒருத்தன் வந்து ‘உத்திர பிரதேசத்துல தங்க சொரங்கம் கண்டுபுடிச்சிருக்காங்களாம். 30 லட்சம் கோடி கிலோ தங்கம் கிடைக்குமாம். மோடி ஆட்சில தான் இதெல்லாம் நடக்குதுன்னு சொன்னான். இதை என்கிட்ட சொல்றதைவிட, இந்தியாவுக்கு வர்ற டிரம்புகிட்ட சொல்லு பாக்கலாம்னு பேசிக்கிட்டே இருந்தேன். திடீர்னு பிரேக்கிங் நியூஸ். அங்க இருக்க தாதுவுல இருந்து மொத்தமே 160 கிலோ தான் பாஸு எடுக்கமுடியும்னு. என்னய்யா உங்காளு ஆட்சில நல்லது நடக்குறதவிட புருடா தான் அதிகமா வருது போலயேன்னு கேட்டா, நாங்க ஒரு சொவரு கட்டிக்கிட்டிருக்கோம். அங்க பெரியாள் வேலைக்கு ஆள் தேவையாம். போய்ட்டு வர்றேன்னு கெளம்பிட்டாப்ல. கடைசி வரைக்கும் உங்களை பெரியாளா வெச்சிட்டு அவங்க மேஸ்திரியாவே தாம்லே இருப்பாய்ங்கன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன். உத்திர பிரதேசத்துல இருந்து மண்ணு எடுத்துட்டு வந்துருக்கேன் தங்கம் கிடைக்கும்னு எவனாச்சும் வருவான் உசாரா இருங்க. நான் போய் மீந்துபோன வடைய திண்ணுட்டு வர்றேன்.

மாஸ்டர் பீஸ்

குழந்தைதனம் கலந்த பெண்,

தாய்மை கலந்த ஆண்,

மேக் த பெஸ்ட் பேர்!

ஜோக்கர்...

350000 டன் தங்கம்ன்னு போடலாமா??!

அட, கிடைச்சதே 150 கிலோதான் மா.

சரிப்பா, அப்ப 3000 டன் ன்னு போட்டுக்கோ.

ℛ𝒜𝒮𝒦𝒜ℒ

அளவுக்கு அதிகமா யார் மேலயும் அன்பு வச்சறாதிங்க அப்புறம் அவங்க எவ்ளோதா அடிச்சு தொரத்தனாலும் நாய் மாதிரி பின்னாடியே போக வேண்டிய நெலம வரும்..!

புதுவை புதல்வன்

90's kids பரிதாபங்கள்...

90's : பொய் என்று தெரிந்தும் ரசித்தேன்...

மாமா : என்ன மாப்ள.. love ஆ..?

90's : என்னது love ஆ..? அய்யோ மாமா அது WWE..

undertaker, triple H, shawn michael லாம் தெரியாதா...

உங்களுக்கு கொஞ்சம் கூட விபரம் இல்லை பாருங்க..

மாமா : யாரு எனக்கு..?

உள்ளூராட்டக்காரன்

குடிசைகளை மறைக்க சுவர் கட்டிவிட்டு அதன் மீதே அமெரிக்க அதிபரை வரவேற்கும் விதமாக வாசகம் எழுதுவதெல்லாம்...

'வேலைக்கு வேலையும் ஆச்சு; அலமாரியும் வெள்ளையாச்சு' மொமெண்ட்

புதுவை புதல்வன்

சென்ற ஆட்சியில்

ரூபாய்களை

செல்லாதவைகள்

என அறிவித்து

இருந்தார்கள்...

இன்றைய ஆட்சியில்

பாய்களை

செல்லாதவர்கள்

என அறிவித்து

இருக்கிறார்கள்...

அடுத்து...?

மாஸ்டர் பீஸ்

பிஸ்கட் தொட்டு சாப்பிட ஒரு கிளாஸ் டீ,

பிஸ்கட் சாப்பிட்டுட்டு குடிக்க ஒரு கிளாஸ் டீ!

'அம்மாக்கு நிகர் அம்மாதான்'

ஜோக்கர்...

ஆறு நாட்கள் "மேலதிகாரியிடம்" மல்லுக்கட்டி,

ஒரு நாள் "மனைவியிடம்" மல்லுக்கட்டுவதற்காக தரும் விடுமுறையே,

"ஞாயிறு" என அறிக..!!!

உள்ளூராட்டக்காரன்

ஞாயிறன்று அமாவாசை வந்து கறிச்சோறு சாப்பிட முடியாம போயிட்டா, அந்த இழப்பை ஈடுகட்டும் விதமாக அதற்கடுத்து வரும் திங்களை விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும்

செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா..?

கடைநிலை ஊழியன்

கல்யாணம் பண்ணாதவனுக்கு கவலை - எனக்கு னு ஒன்னு வாய்க்க மாட்டேங்குது !!

கல்யாணம் பண்ணவனுக்கு கவலை - எனக்கு னு வந்து வாய்ச்சுருக்கு பாரு !!

Hasan Kalifa

கூட்டத்தில் யாராவது ஒரு பெண் உங்களை குறுகுறுவெனப் பார்த்தால்,பதிலுக்கு நீங்களும் பார்த்து விடாதீர்கள்,அது உங்கள் மனைவியின் தோழியாக கூட இருக்கலாம்.

ரஹீம் கஸ்ஸாலி

விசாரணைக்கு நேரில் வந்தால், ரசிகர்கள் அதிகளவில் கூடி, அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரலாம்!- ரஜினிகாந்த்.

விசாரணைக்காக ஒரே ஒரு இடத்துக்கு வருவதற்கே ரசிகர்கள் கூடி சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும்ன்னா.., நாளைக்கு கட்சி துவங்கினால் ஊர் ஊரா பிரச்சாரத்துக்கு போகணுமே... அப்ப வராதா?!

சரவணன். ℳ

~'சில்லறை' கொடுங்கன்னா அவர் கண்டக்டர்

~'சில்லறையா' கொடுங்கன்னா அவர் பெட்டிக்கடைக்காரர்

~'சில்லறையாவது' கொடுங்கன்னா அவர் பிச்சைக்காரர்

-லாக் ஆஃப்.

ஞாயிறு, 23 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon