மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

டிக் டாக்: வியக்க வைக்கும் ஓவிய நடிகன்!

டிக் டாக்: வியக்க வைக்கும் ஓவிய நடிகன்!

ஓவியங்களும், ஓவியர்களும் பல நேரங்களில் நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

உயிரற்ற பொருட்களுக்கு உயிர் அளித்தும், சிரிக்க மறந்த மனிதர்களுக்கு தூரிகை வழி சிரிப்பூட்டியும் பொதுவாகவே நம்மை ரசிக்கவும் வைத்துவிடுவர். ஓவியங்களைப் பார்ப்பதும், ஓவியம் வரைவதும் பலருக்கும் பொழுது போக்கு என்றால், அதே ஓவியம் பலரது வாழ்விலும் மன அழுத்தம் மறைக்கும் மருந்தாகவே மாறியுள்ளது.

திறமை இருந்தும் மேடை கிடைக்காத பலருக்கும் அங்கீகாரம் தேடித் தரும் டிக் டாக் தளம், பல ஓவியர்களையும் அடையாளம் கண்டெடுத்துள்ளது. அதில் குறிப்பிடும்படியான ஓவியர்களுள் ஒருவர் விஷ்ணு கடக்கல் என்னும் கேரளாவைச் சேர்ந்த நபர். ‘நிர்பாக்யவான்’ என ‘அதிர்ஷ்டமில்லாதவன்’ என்பதைத் தனது டிக் டாக் பெயராக வைத்துள்ள இவரது ஓவியங்கள் ஆச்சரியத்தைத் தருகிறது. இந்த திறமை கிடைத்த இவர் எவ்வளவு அதிர்ஷ்டசாலியாக இருப்பார் எனவும் யோசிக்க வைக்கிறது.

@vishnukadakkal

മൂന്നുപേരും പൊളിച്ചു 😇😇 #duet with aiswaryasurya4 #changayees #artiktok #kadakkal #vichukdl #artist #mypencilart #art #drawing #teamrkstar

♬ original sound - കറുപ്പഴകി 😘

டிக் டாக்கில் அங்கீகாரம் தேடி முயற்சித்துவரும் சிறந்த திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களது ஓவியங்களை வரைகிறார்.

@vishnukadakkal

Avana disturb pannaa ippaditaa kovappedum 😇😇😂😂 #duet with jvimal #changayees #artiktok #kadakkal #vichukdl #artist #art #mypencilart

♬ original sound - നിർഭാഗ്യവാൻ

அதன் வழி திறமைகளுக்கு அங்கீகாரம் அளித்து தனக்காக அடையாளத்தைத் தேடிக்கொள்கிறார்.

@vishnukadakkal

ivalav neramaa kashtappettu varanjapparo paakkamaa poriyaa 😇😇 #duet with vinusha #changayees #artiktok #kadakkal #vichukdl #artist #mypencilart

♬ original sound - നിർഭാഗ്യവാൻ

வெறும் ஓவியராக மட்டும் இல்லாமல் தனது நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தி வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

@vishnukadakkal

കൊറേ ഇഷ്ടായി വരച്ചതാ 8hr work 😇😇 not perfect 😢😢 #duet with midhunaamadhu #changayees #artiktok #kadakkal #vichukdl #artist #art #mypencilart

♬ original sound - നിർഭാഗ്യവാൻ

தானும் மகிழ்ந்து பிறருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் இத்தகைய திறமையாளர்கள் பலர் இருக்கிறார்கள். வாய்ப்புகள் தேடி தனக்கான வாய்ப்பை தானே அமைத்துக்கொண்ட இவர்களின் வாழ்க்கையும் மகிழ்வாக இருக்கட்டும்.

டிக் டாக் யூஸர்

ஞாயிறு, 23 பிப் 2020