மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

மோடிக்கு ஐடியா கொடுத்தது தளபதியா?: அப்டேட் குமாரு

மோடிக்கு ஐடியா கொடுத்தது தளபதியா?: அப்டேட் குமாரு

‘நம்ம பிரதமர் ஐயாவுக்கு புதுப் புது திட்டங்களுக்கு எங்க இருந்து ஐடியா கிடைக்குது தெரியுமா?’ன்னு முகமே தெரியாத முகநூல் பிரபலம் ஒருத்தர் போஸ்ட் போட்டிருந்தாரு. பத்து பேர் கமெண்ட் பண்ணி இருக்குற அந்த போஸ்டுக்கு பல பேர் லைக் போட்டிருக்காங்களேன்னு நானும் ஒரு ஆர்வத்தில கமெண்ட்ட போய் பாத்தா அங்க ‘ஹாஹா’ மட்டும் தான் இருக்கு. ஆர்வம் தாங்க முடியாம மெஸஞ்சர்ல அவரத் தேடிப் புடிச்சு, ‘யாரு அண்ணே அந்த புது பிரசாந்த் கிஷோர்?’ன்னு கேட்டேன். அவரும் ஃபார்மாலிட்டிக்கு ஒரு ஹாய் அனுப்பி விட்டு, ‘எல்லாம் எங்க தளபதி தான்’ன்னு பதில் சொன்னாரு. நான் ஷாக் ஆகி, ‘என்ன அண்ணே ஸ்டாலின், மோடிக்கு ஐடியா குடுத்தாரா?’ன்னு கேட்டேன், ‘ஐயோ தம்பி, அந்த தளபதி இல்ல, நான் எங்க தளபதி விஜய் அண்ணாவ சொன்னேன்’ன்னு சொல்றாரு. அவரு என்ன ஐடியா கொடுத்தாருன்னு கேட்டா, ‘இந்த சிவகாசி படத்தில, டீ சூடா இல்லன்னு முதல்ல சுட வச்சு, அப்புறம் சூடாகிப் போச்சுன்னு தண்ணியில வைப்பாரு பாத்திருக்கியா?’னு கேட்டாரு, ‘ஆமா அதுக்கு?’ன்னு கேட்டா, ‘அதே ஐடியாவ ஃபாலோ பண்ணி தான் ஊழல் அதிகமாச்சுன்னு 2000 ரூபா கொண்டு வந்து, இப்போ அதே ஊழல் இன்னும் அதிகமாச்சுன்னு 2000 ரூபா ஏடிஎம்-ல வராதுன்னு சொல்றாங்க’ன்னு புதுசா ஒரு விளக்கம் கொடுத்தாரு. நீங்க அப்டேட்ட படிங்க. நாம் ஃபேஸ்புக்க அன்-இன்ஸ்டால் பண்ணிட்டு வர்றேன்.

எனக்கொரு டவுட்டு ⁉

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிமுக அரசுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது!- ஈபிஎஸ் & ஓபிஎஸ் அறிக்கை

போராட்டத்துக்கு கூடின மக்களை இவுங்களுக்கு கூடினதா நினைச்சிட்டாங்களோ..!?!?

குந்தவை

2000 ரூபாய் நோட்டு வைச்சிருந்தால் மாத்திடுங்க மார்ச் வரையும் தான் நடைமுறையில் இருக்குமாம் பார்த்துகோங்க மக்களே..

ஆர்வக்கோளாறு

மார்ச் 1 ல் இருந்து ஏடிஎம்ல் 2000 ருபாய் நோட்டுகள் வராது - இந்தியன் வங்கி!

2000 மட்டும் வராதா இல்லை மொத்த பணமும் வராதா ?

கோழியின் கிறுக்கல்!!

ஆசிரியர் திட்டி விடுவாரோ என்று பயத்தில் பிள்ளைகள் பள்ளிக்கு சென்றது போய்,

பிள்ளைகள் திட்டி விடுவார்களோ என்ற பயத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லும் காலமிது!!

கடைநிலை ஊழியன்

சிவன் எப்படா இப்படி பாப், ராப், ஹிப் ஹாப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுனாரு ??

ச ப் பா ணி

சைனா டீ கேட்டவனை டீக்கடையே திரும்பிப் பார்த்தது

மெத்த வீட்டான்

விசாரணைக்கு நேரில் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரலாம்.- ரஜினி

அதையெல்லாம் போலீஸ் பார்த்துக்குவாங்க..நீங்க பயமில்லாமல் வரலாம் !

Hasan Kalifa

“கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இளம்பெண் கோஷமிட்டதற்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம்”

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

கொரோனோ வைரஸ் வந்ததற்கும் ஸ்டாலின்தான் காரணம்னு சொல்ல வேண்டியதுதானே.

இதயவன்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிமுக அரசுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது!- ஈபிஎஸ் & ஓபிஎஸ்

எப்ப எம்.ஜீ.ஆர் காலத்துல தானே ??!

சரவணன். ℳ

~'சில்லறை' கொடுங்கன்னா அவர் கண்டக்டர்

~'சில்லறையா' கொடுங்கன்னா அவர் பெட்டிக்கடைக்காரர்

~'சில்லறையாவது' கொடுங்கன்னா அவர் பிச்சைக்காரர்

எனக்கொரு டவுட்டு ⁉

விலை குறைவான ஒரு பொருளை வாங்கி வந்துவிட்டு,விலை அதிகமாக சொல்லும்போது நம் முகத்தை வைத்தே கண்டுபிடிக்கும் மனைவி டிடெக்ட்டிவ் ஏஜென்சி வைக்க அத்துணை தகுதியும் உள்ளவர்..

-லாக் ஆஃப்

குமாரு

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon