மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

வாட்சப் வைரஸும், ஃபேஸ்புக் ஸ்டோரியும்: அப்டேட் குமாரு

வாட்சப் வைரஸும், ஃபேஸ்புக் ஸ்டோரியும்: அப்டேட் குமாரு

‘அண்ணே, சிவராத்திரி அதுவுமா துரைமுருகனுக்கு நெஞ்சுவலி வந்திருக்கே. இதுக்கு என்ன காரணமா இருக்கும்’னு டீக்கடைல ஒருத்தர் கேட்டிட்டு இருந்தாரு. அதுக்கு டீக்கடை அண்ணா ‘எல்லாம் இந்த வாட்சப், ஃபேஸ்புக், யூட்யூப்-ஆல தான்’ அப்டீன்னு பதில் சொல்னாரு. அதுக்கு கேள்வி கேட்டவரு, ‘ஆமா அண்ணே இந்த ஃபோன நோண்டிட்டே இருக்குறதால தான் எல்லா பிரச்னையும் வருதாம், எங்க அம்மா கூட சொன்னாங்க ஃபோன் பாத்திட்டே இருந்தா கல்யாணம் நடக்காதாமே’னு சொல்றாரு. இதுக்கு டீக்கடை அண்ணா, ‘தம்பி, நான் அத சொல்லலப்பா. உடம்ப செக் பண்ணலாம்னு ஹாஸ்பிட்டல் போயிருக்காரு. அதுக்குள்ள நெஞ்சு வலியே வந்துச்சுன்னு எல்லாரும் ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதத் தான் சொன்னேன்’னு பதில் சொன்னாரு. ‘ஆமா அண்ணா, நேத்து என் ஃப்ரெண்டு ஒருத்தன் கால் பண்ணும்போது, லைட்டா இருமிட்டேன். அதுக்குள்ள எனக்கு கொரோனா வந்துச்சுன்னு சொல்லி என் ஃபோட்டோவப் போட்டு ப்ரே ஃபார் ஹிம்-ன்னு ஸ்டேட்டஸ் வைச்சிட்டான். அதே ஃபோட்டோவ டவுன்லோட் பண்ணி எல்லா பசங்களும் ஃபேஸ்புக் ஸ்டோரியாவே வச்சிட்டாங்க. ‘கெட் வெல் சூன்’ அப்டீன்னு ஸ்டேட்டஸ் தான் வச்சானே ஒழிய ஒரு ஃபோன் பண்ணி கூட கேக்கல’ன்னு சோகமா சொல்லிட்டு போறாரு. நீங்க அப்டேட் படிங்க. நானும் எனக்கு யாரு ஸ்டேட்டஸ் வச்சிருக்காங்கன்னு வாட்சப் பக்கம் போய் பாத்திட்டு வர்றேன்.

இதயவன்

திமுகவைப் போன்று, அதிமுக ஓடி ஒளியும் கட்சியல்ல - ஜெயக்குமார்!

அப்ப கூவத்தூர் விடுதிக்கு குத்து பாட்டு கேட்க போனீங்களா மேன் ?!!

மெத்த வீட்டான்

ஆயிரம் கோடி செலவில் வல்லபாய் படேலுக்கு சிலை கட்டப்பட்ட குஜராத்தில்தான் ஏழைகளின் குடிசைகளை மறைக்க தடுப்பு சுவரும் கட்டப்படுகிறது !

எனக்கொரு டவுட்டு

மத்திய அரசிடம் கத்தி எடுத்த சண்டையா போட முடியும்.!? -ஓ.பி.எஸ்

அழுத்தம்தான் கொடுக்க முடியும், அப்படித்தானே சார்..!

உள்ளூராட்டக்காரன்

ஏழ்மையை ஒழிக்க என்ன பண்ணனும்?

செவுரு கட்டணும்

Pachai Perumal.A.

காலையில் வெளியே போகும் போது தேடாமலேயே வண்டிச்சாவி கிடைத்தாலே ஒரு சந்தோசம் தானாவே பிறக்கிறது.

கோழியின் கிறுக்கல்!!

திருமண செலவும், மருத்துவ செலவும் "Status Symbol" ஆக மாறி விட்டன!!

இதயவன்

பிறரின் கண்ணீரின் மதிப்பு அறியாதவரை உன் கண்ணீர்க்கு மதிப்பே இல்லை..!!!!

ச ப் பா ணி

அங்க பாத்துப் போங்க, கல்லு கொட்டியிருக்காங்க.

எம்.ஆர்.ராதா: ரோடு போடுறாங்களோ இல்லையோ 6மாசத்துக்கு முன்னாடியே கல்ல கொட்டியிடுறாங்க

-ரத்தக்கண்ணீர்

மெத்த வீட்டான்

அப்பாக்களுக்குதான் வயசாகும்

பொறுப்புகளுக்கு அல்ல !

Pachai Perumal.A.

ட்ரம்ப் வருகைக்காகச் சுத்தம் செய்யப்படும் யமுனை நதி! .

டிரம்ப் சென்னை வர்றதா நினைச்சிட்டு கூவத்தையும் கொஞ்சம் கிளீன் பண்ணித் தாங்க ஆபிசர்ஸ்.

ஜோக்கர்

"டயட்"டில் இருப்பதை அறிந்துகொள்ள அறிகுறிகள்,

"பாக்கிற எல்லாமே சாப்பிடணும்னு தோணுறதும்'"

அப்படி "சாப்பிடுற எல்லாமே டேஸ்ட்டாவும் இருக்கிற" மாதிரியாய் தெரிவதுமே..!!!

நெல்லை அண்ணாச்சி

3000 கோடியில்..

பட்டேலுக்கு சிலை..

1 கோடியில்...

" தடுப்பு சுவர் "

மயக்குநன்

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுகவுக்கு தொடர்பு!- அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு.

திமுகவுக்கு தொடர்பா... 'திமுகவுக்கும்' தொடர்பா..?!

-லாக் ஆஃப்

குமாரு

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon