மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

தமிழ் சினிமாவில் அமித்ஷா

தமிழ் சினிமாவில் அமித்ஷா

ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பாஸிட்டீவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள திரைப்படம் ‘பிளான் பண்ணி பண்ணணும்’. தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து, சின்னத்திரை நாயகனாகவும் தொடர்ந்து தமிழ் சினிமா கதாநாயகனாகவும் வளர்ந்த ரியோ ராஜ் இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ரோபோ ஷங்கர், பால சரவணன், தங்கதுரை என பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப்படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தப்படத்தின் டீசர் இன்று(பிப்ரவரி 21) வெளியாகியுள்ளது.

யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தத் திரைப்படம் ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. ‘அவர் தான் அமித்ஷா மாதிரி ஐடியா பண்ணி, சந்தான பாரதி மாதிரி எக்ஸிகியூட் பண்ணுவாருன்னு நமக்கு தெரியாதா?’ என்று டீசரில் இடம்பெறும் வசனம் கவனம் ஈர்த்துள்ளது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அதிகம் கவனம் ஈர்த்த ‘நோ மீன்ஸ் நோ’ என்னும் வலிமையான வசனத்தை சிரித்தபடியே ரம்யா நம்பீசன் பேசுகிறார். அதற்கு ரோபோ ஷங்கர், ‘ஐ நோ, நோ மீன்ஸ் நோ’ என்று பதில் கூறுகிறார். படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon