மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

டிக் டாக்: பென்சில் முனையும் ஆஸ்கர் விருதும்!

டிக் டாக்: பென்சில் முனையும் ஆஸ்கர் விருதும்!

உயிரோட்டமான ஓவியங்களும், ஆளுயர கற்சிலைகளும் பல நேரங்களில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும். ஆனால் மிகக்சிறிய பென்சில் முனைகளில் செய்யப்பட்ட சிலைகள் அதை விட அதிகமான வியப்பை நமக்குத் தந்திருக்கும்.

டிக் டாக் தளத்திலும் சிலர் அத்தகைய வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக சலவட் டிடாய்(Salavat Fidai) என்பவரது வீடியோக்கள் ஒவ்வொரு நொடியும் ஆச்சரியங்களை அள்ளித் தருகிறது. இதுவரை 56 லட்சம் பேரால் பின் தொடரப்படும் அவரது டிக் டாக் கணக்கு மொத்தமாக ஒன்பது கோடிக்கும் அதிகமான லைக்குகளை வாரிக் குவித்திருக்கிறது. அப்படி என்ன அவரது வீடியோக்களில் சிறப்பு என்றால், பென்சில் முனைக்கும் உயிர் தரும் அவரது திறமை தான்.

@salavat.fidai

OSCAR 2020 #JOKER #Oscar2020 #Oscar #dccomics #music #song #fyp #sound #art #язвезда #tiktok

♬ Rock 'n' Roll (Part 2) - Gary Glitter

மனிதர்கள், விலங்குகள், பெயர்கள், ஆஸ்கர் விருது, இதய வடிவம் என்று அவர் உருவாக்கும் சிலைகள் அனைத்தும் கவனிக்க வைக்கிறது.

@salavat.fidai

LEGO Man ✏️#lego #фигуркачеллендж #artclub #artschool #займисьтворчеством #искусство #craft 📀 music: Rufus Du Sol "Treat You Better"

♬ Treat You Better - RÜFÜS DU SOL

தான் இத்தனை பெரிய கலைஞனாக இருந்தாலும் ஒரே முயற்சியில் வெற்றி என்பது சாத்தியமற்ற ஒன்று தான் என்பதையும் அவர் உணர்த்தியுள்ளார்.

@salavat.fidai

💚Hearts #fanart #foryou #music #billieeilish #song #fyp #art #billieeilishfans #зурхоккей #hcsalavat #singlelife #рольвтикток #СберЛюбимка

♬ bad guy(meow version) - funny

ஒரு இதயவடிவத்திற்குள் மற்றொரு இதயம் வருவதாக ஒரு பென்சில் ஆர்ட்டை அவர் உருவாக்கியுள்ளார். ஆனால் அவ்வாறு செய்வதற்குள் தான் எத்தனை முறை தோல்வி கண்டேன் என்பதை உணர்த்தியதோடு, வெற்றியின் சுவை எத்தனை இனிமையானது எனவும் நிரூபித்துள்ளார்.

டிக் டாக் யூஸர்

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon