Oடிக் டாக் தரும் தன்னம்பிக்கை!

entertainment

‘உடல் எடையைக் குறைப்பது எப்படி? உடல் எடையை அதிகரிக்க என்ன செய்யலாம்? முகம் பளபளப்பாக ஒளிர இதைப் பின்பற்றுங்கள்!’ இது போன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் தேடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இவற்றில் கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி சிறிய மாற்றம் ஏற்பட்டால்கூட அதன்வழி அளவற்ற மகிழ்ச்சியும், நம்பிக்கையும் கிடைத்துவிடுகிறது. வழிமுறை விளக்கம் மட்டுமின்றி, அவற்றைப் பின்பற்றியதால் தங்களுக்கு ஏற்பட்ட மாற்றம் குறித்தும் பலரும் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர். ‘எப்படி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்’ என்பது போல அவர்கள் வெளியிடும் அத்தகைய வீடியோக்கள் பலரையும் வெகுவாகக் கவர்ந்துவிடுகிறது.

@_triptieeeee_

It’s just 5 months transformation😅More to go💪💃#looksalsomatter

♬ looksalsomatter – kaurmaahii

சாதாரணமாக ரசிக்கவைக்கிறது என்று சொல்வதை விடவும், ஒருவரின் தன்னம்பிக்கையின் அளவிலும் பெரிய மாற்றம் ஏற்படுத்துகிறது. ‘இவர்களால் முடியும் என்றால், என்னாலும் முடியும் தானே’ என்று பலரும் அந்த வழிகளைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுகின்றனர். இதுபோன்ற ‘செல்ஃப் டிரான்ஸ்ஃபர்மேஷன்’ வீடியோக்கள், டிக் டாக் உலகிலும் தனிக்கவனம் பெறுகிறது.

@vinodomi

#myjourney #fattofit #facemorphchallenge #gymlife #myvlog #nevergiveup #transformationchallenge 🏋🏼‍♂️💪🏼🤗

♬ Baahubali Movie OST – Bhairava

முந்தைய உடல் எடை, உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உடலில் ஏற்பட்ட புதிய மாற்றம் போன்றவற்றை விளக்கி அவர்கள் பதிவேற்றும் வீடியோக்களுக்கு மில்லியன் கணக்கில் பார்வையாளர்களும் கிடைக்கின்றனர்.

@aswathishekher

Weight loss transformation 😍😍😍

♬ Countdown – TikTok

இத்தகைய வீடியோக்கள் பலருக்கும் உந்துதலாக இருந்து மாற்றத்துக்கான மந்திரத்தைக் கற்றுத்தருகிறது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *