மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

அமெரிக்காவுக்கு ஒரு டிக்கெட் போடு: அப்டேட் குமாரு

அமெரிக்காவுக்கு ஒரு டிக்கெட் போடு: அப்டேட் குமாரு

‘அண்ணே, தெலுங்கானால ஒருத்தரு ட்ரம்புக்கு கோவில் கட்டியிருக்காரு பாத்தீங்களா’ன்னு இன்னைக்கு தம்பி ஒருத்தன் கேட்டான். இதக் கேட்டிட்டு இருந்த இன்னொருத்தன் அவனே வாண்டட்-ஆ வந்து, ‘ஓ, அது ட்ரம்ப்பா, நான் கூட லல்லு பிரசாத் யாதவ்-ன்னு நெனச்சேன்’னு சொல்லிட்டு போறான். ‘இப்போ எல்லாம் நம்ம ஊர் மக்களுக்கு நம்ம மோடி ஐயாவையும், ட்ரம்ப் சாரையும் பிரிச்சு பாக்கவே முடியல பாத்தீங்களா. ரெண்டு பேரையும் ஒண்ணா பாத்தாலே ‘ரத்தத்தின் ரத்தமே’ பாட்டு என் காதுக்குள்ள ரிங் டோன் மாதிரி ரிப்பீட் மோடில கேக்குது’ன்னு அந்த தம்பி தன்னோட விசுவாசத்திலயும், பாசத்திலயும் சொல்லிட்டு இருந்தாரு. இப்போவும் முன்னாடி கமெண்ட் பண்ண அதே பையன், ‘அவரு இங்க வருவாரு. ஆனா இவரு அங்க போக மாட்டாரு. ஏன் தெரியுமா? அமெரிக்காவிலயும் தமிழ் மக்கள் இருக்காங்களே’ன்னு சொல்றாரு. இனிமேலும் இங்க இருந்தா இவங்க கூட நானும் அடி வாங்க வேண்டியதா இருக்கும். நீங்க அப்டேட்ட படிங்க. நான் எஸ்கேப் ஆகுறேன்.

மித்ரன்

திமுகவைப் போன்று, அதிமுக ஓடி ஒளியும் கட்சியல்ல - அமைச்சர் ஜெயக்குமார்

ஆமா சட்டுன்னு கால்ல விழுந்துருவோம்..?!

ச ப் பா ணி

நட்பு நட்பாக இருந்தகாலம்

யாருக்குத்தான் இருந்திருக்காது

ஆனால் பாருங்கள் அது இறந்தகாலம்

mohanram.ko

'முழுக்க நனைந்தபிறகு', தேனீருக்கே சொந்தமாகி விடுகிறது பிஸ்கட்

ℳsd✰இதயவன்

இந்த ஆட்சி கலைந்துவிடும் என்று பலர் கூறினர்!- ஓபிஎஸ்.

ஆமாம் அதை முதல்ல சொன்ன பெருமை உங்களையே சேரும்..?!!-ஈபிஎஸ்

சரவணன். ℳ

ஏன்யா, பாண்டிச்சேரி போறேன்னு சொல்லிட்டு எந்த பஸ்லயும் ஏற மாட்டேங்கறே...?

எல்லா பஸ் கண்டக்டரும் 'பாண்டி' மட்டும் ஏறுங்கன்னு தானே சொல்றாங்க, என் பேரு கிஷோருங்க...!

கோழியின் கிறுக்கல்!!

"என்னை வரவேற்க 70 லட்சம் மக்கள் வருவார்கள் என மோடி கூறினார்"- ட்ரம்ப்!!

எங்க கிட்ட கூடத்தான் ஒவ்வொருத்தர் கண்க்கிலேயும் 15 லட்சம் போடுறேன்னு சொன்னார்!!

ச ப் பா ணி

ஆள் உயரத்தை தாண்டிய கேட் உள்ள வீடுகளில் முதலில் நாய்களை தான் தேடுகிறார்கள்... பிறகு தான் மனிதர்களை.,."

நாகராஜ சோழன் MA. MLA

சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி; தமிழ் மொழியை தமிழர்கள் மட்டுமே பேசுகின்றனர் - இல. கணேசன்

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சினு சொல்றாரு.....

சம்ஸ்கிருதம் நாடு தழுவிய மொழினு சொல்றாரு....

பாவம் அவரே குழப்பத்தில் இருக்காரு....

மித்ரன்

மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமைப்பதை உண்டால் நாயாக பிறப்பீர்கள் என குஜராத் சாமியார் பேச்சு - செய்தி

துக்ளக் படிப்பாரு போல.?!

நட்சத்திரா

தனக்கு மட்டும் தான் கஷ்டம் , கவலை, கோபம், கடுப்பு, எரிச்சல், தோல்வி என்று நினைப்பவர்களை

ஒருநாளும் மாற்றவே முடியாது

ஆர்வக்கோளாறு

தன் வீட்டு பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் தவிப்பவர்களே அடுத்த வீட்டுப் பிரச்சனையை அறிய ஆசைப்படுவார்கள் ..!!

ஜோக்கர்

"மனைவிக்கும் அம்மாவுக்கும்" இடைப்பட்ட ஒரு ஆணின் வாழ்க்கை எத்தனை சுதந்திரம் எனில்,

"பஸ்ல மூணு பேர் சீட்ல நடுவுல உட்கார்ந்து ரிலாக்ஸா" வாங்கன்னு சொல்ற மாதிரிதான்..!!!

-லாக் ஆஃப்

குமாரு

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon