மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

டிக் டாக்: இது நம்ம ஊரு மிஸ்டர்.பீன்!

டிக் டாக்: இது நம்ம ஊரு மிஸ்டர்.பீன்!

கேலி, கிண்டலாக, 90’ஸ் கிட்ஸ் எனப்படும் 90 களில் வளர்ந்தவர்களுக்கும், இன்றைய தலைமுறையான 2கே கிட்ஸ் எனப்படும் 21-ஆம் நூற்றாண்டில் வாழத் துவங்கியவர்களுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகப் பலரும் பேசிவருகின்றனர்.

கிண்டல்களை எல்லாம் ஓரம் வைத்து விட்டுப் பார்த்தாலும் அதில் ஒரு மிகப்பெரிய உண்மை இருக்கத்தான் செய்கிறது. உணவுப்பழக்கம், உடை அலங்காரம், வாழ்க்கை முறை எனத் தொடங்கி அவர்கள் கண்டுகளித்த திரைப்படங்கள் மற்றும் காட்டூன் நிகழ்ச்சிகள் வரை பெரிய தாக்கத்தை 90’ஸ் கிட்ஸ் மனதில் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு 90’ஸ் கிட்ஸின் குழந்தைப் பருவத்தை குதூகலமாக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ‘மிஸ்டர் பீன்’.

முகத்தில் சாயம் பூசாத ஒரு கோமாளியாக, தனது கஷ்டங்களை எல்லாம் சிரித்துக் கடக்கும், சிரிக்க வைத்து ரசிக்கவைக்கும் மிஸ்டர் பீனிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. கண நேரத்தில் கவலையை மறக்கச் செய்யும் மிஸ்டர்.பீன் வீடியோக்களைப் பலரும் இன்றும் யூட்யூப் போன்ற தளங்களில் தேடிப் பார்த்துவருகின்றனர். கதையைப் போன்றே மிஸ்டர்.பீனாக நடித்த ரோவன் அட்கின்சனும் பெரும் புகழ் பெற்றார்.

இன்று அதே மிஸ்டர்.பீனை மீண்டும் நினைவுபடுத்தி டிக் டாக் வரைக் கொண்டுவந்துள்ளார், தமிழக இளைஞர் ஒருவர். அச்சு அசலாக மிஸ்டர்.பீனின் முக பாவனைகள், அப்பாவித் தனம் என்று அனைவரையும் ரசிக்கவைத்து லைக்குகளை வாங்குகிறார்.

@kailashkmk

#DanceWithDarkFantasy #indiachallenge #mrbean #kmk tiktoktamil tiktok

♬ original sound - Kailash Kmk

தமிழ் பாடல்களுக்கு மிஸ்டர்.பீன் நடனம் ஆடியிருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையையும் கண் முன் நிறுத்துகிறார்.

@kailashkmk

#DanceWithDarkFantasy #zoommyface #indiachallenge #mrbean #kmk tiktoktamil tiktok

♬ original sound - 💥தமிழச்சி 💥

தமிழக இளைஞர்களின் இத்தகைய திறமைகளும் அடையாளம் காணப்படட்டும்.

-டிக் டாக் யூஸர்

புதன், 19 பிப் 2020